
போலீஸ் ஃபேமிலி விமர்சனம்
மிகப் பெரிய ரவுடியான சரவணன், தன்னோட பையனுக்காக ரவுடித்தனத்த விட்டுட்டு அமைதியா வாழ்ந்திட்டு இருக்காரு..இந்த நிலையில அவரோட பையன கஞ்சா கடத்துன வழக்குல போலீஸ் கைது பண்ணி ஸ்டேஷன்ல அடிச்சு துன்புறுத்தறாங்க.. உயிருக்கு போராடிட்டு இருக்கற பையன தூக்கிட்டு போய் காட்டுக்குள்ள போட்டுட்டு வந்திருறாங்க..ஆனா அடுத்த நாள் அந்த பையன் இறந்துகெடக்காரு.. சரவணனோட பையன்னு தெரிஞ்சதும் ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனே பயந்து நடுங்குது.. விஷயம் தெரிஞ்ச சரவணன் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையே பழிவாங்க துடிக்கிறாரு.. மகன கொன்னது யாரு.. சரவணனோட பழிவாங்குற திட்டத்துல இருந்து போலீஸ் டீம் தப்பிச்சாங்களா அப்படிங்கறதுதான் கதை..
தயாரிப்பாளர் ராஜா மலைச்சாமியே கதையோட நாயகனா நடிச்சிருக்காரு.. அதாவது எஸ்ஐயா ரெண்டு பெண்களோட அப்பாவா வர்றாரு.. ரவுடியோட பையன கைது பண்ணி லாக்கப்ல வெச்சு இவரு தலைமையிலான போலீஸ் டீம்தான் சித்ரவதை பண்ணுறாங்க.. வில்லன் கிட்ட இருந்து தன்னோட டீமயும் ரெண்டு மகள்களையும் காப்பாத்த ரொம்பவும் போறாடுறாரு.. நடிப்புன்னு பாத்தா ஓகேதான்.. சில இடங்கள்ல இன்னும் முயற்சியும் பயிற்சியும் தேவை..
காதல் சுகுமார் சின்ன தவறுக்காக பெரிய இழப்பை சந்திக்குற காவலராக நடிச்சிருக்காரு.. ரவுடியாக சரவணன் வழக்கமான நடிப்பை கொடுத்திருக்காரு.. மற்ற போலீஸ்காரர்கள், நாயகிகள் நிஷா தூபே, சுரேகா ஆகியோர் நடிப்பும் ஓகே ரகம்.. ரோஜன் லியோன், எம்எஸ் செல்வா உள்ளிட்டவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க..
ஜெயகுமார் தங்க வேலோட ஒளிப்பதிவு கொடுத்த பட்ஜெட்டுக்கு குறையில்லாத உழைப்ப கொடுத்திருக்கு.. ஜெயா கே தாஸோட மியூசிக்ல பாடல்கள் மற்றும் பின்னணி ஓகேதான். எழுதி இயக்கியிருக்கற பாலு, போலீஸ் மற்றும் ரவுடி இடையே நடக்குற ஈகோ மோதல மையமா வெச்சு ஒரு க்ரைம் த்ரில்லரா கொடுக்க நினச்சிருக்காரு.. பட்ஜெட் பிரச்சனை படத்துல தெரிஞ்சாலும் திரைக்கதையில விறுவிறுப்ப கூட்டி ரசிக்க வெச்சிருக்காரு.. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா சூப்பர் படமா வந்திருக்கும்.. மொத்தத்துல போலீஸ் ஃபேமிலி.. பழிக்குப் பழி..
