
வெஞ்சென்ஸ் இந்த படத்தோட கதை என்னன்னா.. நாயகி அபர்ணதிக்கு சின்ன வயசுல இருந்தே தன்னை எல்லோருமே பாராட்டனும் அப்படின்னு நினைக்குறாங்க.. எப்போதுமே என் பேர சொல்லி எல்லோரும் பேசனும் என்னப்பத்தி தான் செய்திகள் இருக்கனும் அப்படின்னு பேர், புகழுக்காக என்ன வேணா செய்யுற கேரக்டர்.. வளர்ந்ததுக்கு அப்புறம் கலெக்டர் ஆகுற அபர்ணதி, ஆளுங் கட்சி மற்றும் எதிர்கட்சி உள்பட எல்லார் கூடயும் பகையை வளர்த்துக்குறாங்க..அந்த பகையும் நாயகியோட பழிவாங்குற உணர்வும் நாயகிக்கு எந்த வகையான பாதிப்புகள கொடுக்குது அதுக்கு அவங்களோட ரியாக்ஷன் மற்றும் ரிப்ளே என்ன அப்படிங்கறதுதான் வெஞ்சென்ஸ் படத்தோட கதை..
நாயகி அபர்ணதி புகழுக்காக எதையும் செய்யுற கேரக்டர்.. நல்லாவே நடிச்சிருக்காங்க. தான் படுச்ச ஸ்கூல்ல தன்ன யாருக்குமே தெரியல அப்படிங்கறதுக்காக நல்லா படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரதாகட்டும்.. அதுக்காக பாராட்டுனவங்க மூனு நாள்ல மறந்துட்டாங்கனு சொல்லி காலத்துக்கும் தன்ன மறக்காம இருக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு எடுக்குற முடிவாகட்டும் நடிப்புல அசத்தியிருக்காங்க.. ஒரு பெண்ணா இருந்துட்டு அத்தன ஆண்களையுமே பந்தாடுற அவங்களோட தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்குது..
எதிர்காலத்துல கதை ஆரம்பெச்சு நாயகியோட கடந்த கால பெருமையை சொல்றதா கதை விரியுது.. அதுல லோக்கல் அரசியல் தொடங்கி சென்ட்ரல் அரசியல் வரை நாயகியோட செல்வாக்கு எப்படி அதிகரிக்குது, அதுனால உருவாகுற பகை அப்படின்னு அரசியல் த்ரில்லர் படமா கொடுத்திருக்காங்க..
இளவரசு, காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஜான் விஜய் என ஏகப்பட்ட கேரக்டர்ஸ் படத்துல வராங்க. அவங்களோட பங்கு என்னவோ அதை சிறப்பா செஞ்சிட்டு போறாங்க.. நாயகியோட பி.ஏ.வா வர்ற சைதன்யாவோட நடிப்பும் நல்லா இருக்கு.. சீனியர் நடிகை சச்சுவும் தன்னோட அனுபவ நடிப்ப கொடுத்திருக்காங்க..
எம்.எஸ்.பிரபுவோட ஒளிப்பதிவு எதிர்காலம், கடந்த காலம் என காலத்துக்கு ஏற்ற உழைப்ப கொடுத்திருக்கு.. கார்த்திக் ராஜா இசைல பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்குது.
தனி ஒரு பெண்ணோட பகையும் பழிவாங்கலுமே படத்தோட பிரதானம் என்பதால நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கற தவிர்க்க முடியல.. நல்ல கதையை எடுத்துக்கிட்ட இயக்குனர் திரைக்கதையில ஏமாற்றம் கொடுத்திருக்காருன்னே சொல்லலாம்.. முதல்பாதி இலக்கில்லாம போற உணர்வ கொடுக்குது.. இரண்டாம் பாதியும் அதே மாதிரி போய் பார்ட் 2வுக்கான லீடோட முடியுது.. மொத்தத்துல வெஞ்சென்ஸ்.. தடுமாற்றம்..
