
மதராசி திரைப்படத்தில்
சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜு மேனன், விக்ரந்த், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடிப்பில்
இயக்கம் : ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பு : என். ஸ்ரீலட்சுமி பிரசாத்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு : சுதீப் ஏலமோன்
எடிட்டிங் : ஏ. ஸ்ரீகார் பிரசாத்
“மதராசி” சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
கதை :
விராட் (வித்யுத் ஜாம்வால்) தனது நண்பர் சிறாக் (ஷபீர் கல்லாரக்கல்) உடன் சேர்ந்து தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர சிண்டிகேட் குழுவுடன் கைகோருக்கிறார். இதை தடுக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தலைவர் பிரேம்நாத் (பிஜு மேனன்) முயற்சி செய்கிறார், ஆனால் அதில் தோல்வியடைகிறார். அந்த நேரத்தில் அவர் தற்கொலை செய்ய நினைக்கும் ரகுராம் (சிவகார்த்திகேயன்) என்பவரை சந்தித்து, தனது மிஷனில் அவரைப் பயன்படுத்துகிறார்.
இந்த ரகுராம் யார்? அவர் ஏன் உயிரை முடிக்க விரும்புகிறார்? மலதி (ருக்மிணி வசந்த்) அவருடன் எப்படிச் சேர்ந்திருக்கிறார்? இறுதியில் பிரேம்நாத் தனது திட்டத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது சிவகார்த்திகேயன் தான் இதுவரை இல்லாத மிகச்சிறந்த ஒரு நடிப்பையும் யாருமே எதிர்பார்க்காத மயிர் கூச்சடிக்கும் அளவிற்கு சண்டைக் காட்சிகளிலும் நம்மை மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனின் ஆக்சன் படங்களில் இது ஒரு மைல் கல்லக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
நாயகி ருக்மணி அழகிலும் சரி நடிப்பிலும் சரி நம்மை மிக அற்புதமாக கவருகிறார் அவருக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அதோடு அவரின் சிரிப்பால் ரசிகர்களை ரசிகரிக்கிறார் என்று கூட சொல்லலாம். கதையின் ஓட்டத்தை புரிந்து இயக்குனரின் எண்ணத்தைக் கேட்ப மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
வித்யூட் ஜமால் மீண்டும் தான் ஒரு சிறந்த வில்லன் என்பதை நிரூபித்து இரக்கிறார். துப்பாக்கி படத்தை மிஞ்சும் அளவிற்கு மிக சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். அதைவிட சண்டைக் காட்சிகளில் மிரட்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இயக்குநர், நாயகனின் கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கிறார். கதை சோம்பிய போதிலும் சிவகார்த்திகேயன் தனது நடிப்பால் கவனத்தை கவர்கிறார். முதல் பாதியில் ஹீரோவின் வினோதமான நடத்தை குறித்து கொடுக்கப்பட்ட பின்புல கதை நியாயமாக இருக்கிறது.
ஹீரோ–ஹீரோயின் இடையேயான மோதல் நியாயமானதாக இருந்தாலும், அதை இன்னும் ஆழமாக எடுத்திருக்கலாம். சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடுமையான சூழ்நிலைகளில் கூட அவர் சிரிப்பை உண்டாக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. பிஜு மேனனுடன் அவர் பகிரும் காமெடி தருணங்கள் நல்லா வேலை செய்துள்ளன. ருக்மிணி வசந்த் தனது வேடத்தில் சீராக நடித்துள்ளார்.
ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் ஸ்லீக் ஆன காட்சிப்படுத்தலுடன் பெரிய திரையில் கவர்ச்சியாக தெரிகின்றன. ஆக்ஷன் ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அவர்களுக்கு சற்றேனும் ரசனை தருகிறது. மேலும், துப்பாக்கி கலாச்சாரத்தின் அபாயத்தை குறிக்கும் சமூகச் செய்தியையும் முருகதாஸ் கூறியிருப்பது பாராட்டத்தக்கது.
தொழில்நுட்ப அம்சங்கள் :
அனிருத் ரவிச்சந்தரின் பாடல்களும் பின்னணி இசையும் தரமாக இருக்கிறது. இது அவரது இசையிலிருந்து எதிர்பார்த்த ஒன்று. சுதீப் ஏலமோனின் ஒளிப்பதிவு குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பாராட்டத்தக்கது.
முருகதாஸ் கடந்த படங்களுடன் ஒப்பிடும்போது, “மதராசி” சற்று மேம்பட்டு இருக்கிறது என்று தன் சொல்ல வேண்டும். படத்தின் ஆரம்பக் காட்சியை ஹாலிவுட் படத்திற்கு நிகராக படம் ஆக்கி இருக்கிறார் அதேபோல இடைவேளை சண்டைக்காட்சி மயிர் கூச்செடிக்கும் அளவில் மிக அற்புதமாக காட்சி அமைத்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் திரைக்கதை இதுவரை ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு வித்தியாசமான ஆக்சன் படத்தை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஏன் இழந்த இடத்தை மீண்டும் கைப்பற்றுகிறார் என்றும் சொல்லலாம் சபாஷ் முருகதாஸ்
மொத்தத்தில் மதராசி ரசிகர்களுக்கு விருந்து
