Tuesday, October 27
Shadow

மை லார்ட் திரைவிமர்சனம்

‘மை லார்ட்’ – வலுவான கருத்து, தடுமாறிய திரைக்கதை

வள்ளலார் கூறிய “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற மனிதநேயக் கொள்கையை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களத்தை எடுத்துக் கொண்டாலும், அதனை முழுமையான தாக்கத்துடன் வெளிப்படுத்தத் தவறிய திரைப்படமாக ‘மை லார்ட்’ அமைந்துள்ளது.

படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதிகார அகங்காரத்தில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு, ஒரு சாதாரண மனிதனுக்கு தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மையமாகக் கொண்டதே இந்தப் படம். ஏழை கிராம மக்களை ஏமாற்றி நடைபெறும் சிறுநீரகத் திருட்டு சம்பவங்கள் படத்தின் முதல் பாதியில் வலுவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டாம் பாதியில் இயக்குநர் ராஜு முருகன் கதை சொல்லும் பாதையை மாற்றி அமைத்தது திரைக்கதையின் ஓட்டத்தை பாதித்துள்ளது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் நம்பகத்தன்மையும் இரண்டாம் பாதியில் குறைவடைந்ததால், படத்தின் மொத்த தாக்கம் சீர்குலைந்ததாக தோன்றுகிறது.

தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிய சசிகுமாருக்கு, இந்த திரைப்படம் ஒரு பின்னடைவு என்றே கூறலாம். இருப்பினும், அவரது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பு வழக்கம்போல் ரசிகர்களை கவர்கிறது. நாயகி சைத்ரா, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பெண்ணின் உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி, தனது திறமையான நடிப்பால் படத்திற்கு முக்கிய பலமாகத் திகழ்கிறார். அவரின் ஒவ்வொரு காட்சியும் ஒரு திறமையான நடிகையாக அவரை நிலைநிறுத்துகிறது.

மத்திய மந்திரி கதாபாத்திரத்தில் நடிகை ஆஷா சரத் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குரு சோமசுந்தரம் தனது அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரின் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதே உணரப்படுகிறது.

இயக்குநர் கதைக்கு தேவையான அளவை விட அதிகமான கதாபாத்திரங்களை இணைத்திருப்பது படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படத் தோல்விக்குப் பிறகு, ‘மை லார்ட்’ மூலம் ராஜு முருகன் வலுவான திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அது முழுமையாக நிறைவேறவில்லை.

படத்தின் முக்கிய பலமாக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் சான் ரோல்டன் ஆகியோரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. காட்சியமைப்பும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளன.

மொத்தத்தில், வலுவான கருத்தைக் கொண்டிருந்தாலும் திரைக்கதை தடுமாறியதால், ‘மை லார்ட்’ முழுமையான திரை அனுபவத்தை வழங்கத் தவறியதாக சொல்லலாம்.

Related posts:

‘பாரிஸ் கஃபே’ – காதலுக்கு அப்பால் பேசும் சமூகக் கதை!

Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2

தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு

கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித...

ட்ரோன்ஸ் திரைப்பட விமர்சனம்: குழந்தைகளின் கற்பனை உலகத்துக்குள் ஒரு கலகலப்பான பயணம்!

திரை விமர்சனம்: ‘அங்கம்மாள்’

இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண...

நீ பார் எவர் – உறவுகளின் உணர்வை பேசும் மென்மையான காதல் கதை