
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகவும் முக்கியமான படம் என்றால் அதில் நிச்சயம் ஷாஜகான் படம் இருக்கும். இந்த படம் மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் எவர் கிரீன் பேவரைட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் நாயகியை உருகி உருகி காதலிக்க இன்னொரு ஹீரோ வந்து அவரை திருமணம் செய்து கொள்வார். அவர் வேறு யாருமல்ல பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணா திவாகர் தான்.
இவர் தமிழில் நிறைய படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர மலையாள படங்களில் நடித்து வரும் கிருஷ்ணாவை சமீப காலமாக எந்த ஒரு தமிழ் படத்திலும் பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில் கிருஷ்ணா அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த பின்னர் எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டேன்.
இப்போது மலையாள படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் விரைவில் நடிப்பேன். ஒருமுறை போனில் விஜய்யை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அப்போது அவரது மேனேஜர் பேசினார். அவரிடம் நான் ஷாஜகானில் விஜய்யுடன் நடித்தவர் என்று கூறினேன்.
ஆனால் அவரோ இப்போது ஷாஜகான் விஜய் அல்ல பீஸ்ட் விஜய் என கூறி போனை கட் செய்துவிட்டார். விஜய் இப்போது வேற லெவலில் உள்ளார். நான் எப்படியும் வருங்காலத்தில் அவரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறியுள்ளார்.