
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரோமியோ பிக்சர்ஸ் வெளியிட்டில் வெளிவந்திருக்கும் படம் ஓஹோ எந்தன் பேபி இந்த படத்தை
எழுதி மற்றும் இயக்கம் – கிருஷ்ணகுமார் ராமகுமார்
இந்த படத்தில் நடித்தவர்கள் விஷ்ணு விஷால், ருத்ரா, மிதிலா பால்கர், வைபாவி டாண்ட்லே, கருணாகரன், ரெட்டிங்டன் கிங்ஸ்லி, இயக்குநர் மிஷ்கின், கஸ்தூரி விஜய் சாரதி மற்றும் கிருஷ்ணகுமார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் நேர்த்தியான ஒரு காதல் கதை தான் இந்த ஓ எந்தன் பேபி அர்த்தமுள்ள ஒரு திரைக்கதை உணர்ச்சிபூர்வமான கதைக்களத்துடன் மனதை வருடும் பீல் குட் காதல் கதை என்றே சொல்லலாம்.
ஒரு காலத்தில் திரையில் உதட்டோடு உதடு முத்தம் காண்பிக்கப்படுவது ஒரு பெரிய விஷயமாகவே கருதப்பட்டது! ஆனால் காலமும், பார்வையும் இன்று மாறிவிட்டன!
இது ஒரு ரசிக்கக்கூடிய காதல்-நகைச்சுவைத் திரைப்படமாகச் அமைந்துள்ளது, அதில் இப்படியான காட்சிகள் நிறையவே உள்ளன!
ஒரு பள்ளி மாணவனாகவும், இயக்குநராக மாறவேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞராகவும் அவர் சரியான தோற்றத்தில் தெரிவார்.
அஷ்வின் என்ற இளைஞன், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
பள்ளி நாட்களில் தொடங்கிய காதல், மீரா (மிதிலா பால்கர்) என்ற பெண்ணை சந்திக்கும் வரை தொடர்கிறது. வழக்கம்போல பிரிகிறார்கள், பின்னர் மீண்டும் இணையிறார்கள்!
ஒரு நாள், பிரபல நடிகரான விஷ்ணு விஷாலை சந்தித்து தன் கதையை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தனது தோல்வியடைந்த காதல் கதையை ஒரு திரைக்கதையாக விளக்குகிறார்.
இயக்குநர் மிஷ்கினும் இப்படத்தில் தானாகவே நடிக்கிறார், அவருடன் வரும் காட்சிகள் சிறப்பாக அமிந்திருக்கின்றன!
ஜென் மார்டின் வழங்கிய இசை இளையோர்களை கவரும் விதத்தில் இருப்பது போல் தெரிகிறது.
இத்திரைப்படம் நிச்சயமாக இளைய தலைமுறையினரால் வரவேற்கப்படும்.
விஷ்ணு விஷாலின் இந்த ஹோம் ப்ரொடக்ஷன், அவரது இளைய சகோதரர் ருத்ராவின் அறிமுகமானது. ஆரம்பத்திலேயே அவர் ஒரு நல்ல முன்னேற்றத்தைப் பெறுகிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று சொல்லலாம் அவரை பார்க்கும் போது நம்ம வீட்டு பிள்ளை போலவே ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதோடு கதையின் சாராம்சம் புரிந்து அதற்கான முழுமையான தன் பங்கை வெளிப்படுத்துகிறார். சிறப்பான நடிப்பு முதல் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதில் தன் தன் திறமையை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
நாயகி மிதிலா பாஸ்கர் இவரும் படத்திற்கு மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு நாய்க்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தம்பிக்கு பலம் சேர்க்க இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். அது தம்பி ருத்ராவுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராமல் மிக நேர்த்தியாக தன் கதாபாத்திரத்தை வடிவமைத்து நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் இயக்குனர் மிஷ்கின் இவரின் கதாபாத்திரம் கதையின் திருப்புமுனை என்றே சொல்லலாம். அவரின் நிஜ வாழ்க்கையை இந்த கதையில் பயணித்திருக்கிறார் அதாவது ஒரு இயக்குனராக அவர் நிஜத்தில் எப்படி இருப்பாரோ அதேபோல பயணித்திருக்கிறார். அது இந்த பணத்திற்கு மிகப்பெரிய பலம்.
நடிகராக இருந்து இயக்குனராக பதவி ஏற்றிருக்கும் கிருஷ்ணா இயக்குனர் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ஒரு அற்புதமான உணர்வுபூர்வமான காதல் கதையை கொடுத்து நம்மளை நெகிழ வைத்திருக்கிறார் அதோடு மீண்டும் தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வரும் என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சியாக கூட இருக்கும்.
இத்திரைப்படம் நிச்சயமாக இளைய தலைமுறையினரால் வரவேற்கப்படும்
மதிப்பீடு – ****
