Tuesday, July 21
Shadow

மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*

*மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*

*மக்கள் ஆதரவு… நன்றி தெரிவித்த போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*

Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர் திரையரங்கம் சென்று மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மக்களின் ஆதரவுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

Related posts:

மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu)

சிம்ரன் தனது 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார் ('The Last One') movie

ஆக்சன் கிங் அர்ஜுனன் பிரம்மாண்டம்

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுப...

ஜோ” திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!*

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர்

மாஸ் நாயகன் என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா...’ இப்...

சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா