
அனீஷ் அஸ்ரப் இயக்கத்துல வெற்றி, தம்பி ராமையா நடிச்சிருக்கற முதல் பக்கம் படத்தோட விமர்சனத்தை தான் இப்ப பாக்கப்போறோம்..
முதல் பக்கம் படத்தோட கதையைப் பற்றி பாத்தோம்னா, புகழ்பெற்ற எழுத்தாளரோட மகன் தான் வெற்றி. அப்பா இறந்துவிட அவரப்பத்தி தொடர்கதை எழுத வரும் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவி செய்யறாரு வெற்றி.. இதுக்காக சென்னை வரும் அவருக்கு போலீசான தம்பி ராமையாவோட நட்பு கிடைக்கிறது.. அங்கு நடக்குற கொலைகளை தன்னோட புத்திசாலித்தனத்தால கண்டுபிடிக்கிறாரு வெற்றி.. இதுனால வெற்றியை தம்பி ராமையா கூடவே வெச்சுக்குறாரு.. இந்த நிலையில சென்னையில பல இடங்கள்ல முகம் சிதைக்கப்பட்டு கொடூரமா பலபேரு கொல்லப்படுறாங்க.. இந்த கொலைகள செய்யற சைக்கோ கொலைகாரன் யாரு? கொலைகளுக்கான காரணம் என்ன அப்படிங்கறத வெற்றியும் தம்பி ராமையாவும் கண்டுபிடிச்சாங்களா அப்டிங்கறதுதான் கதை..
வெற்றி ஆரம்பத்துல நல்ல நல்ல கதைகள தேர்வு செஞ்சு நடிச்சிட்டு இருந்நாரு.. ஆனா சமீப காலமாக அவரோட கதை தேர்வு சரியா அமையல.. இந்த படத்துலயும் பெருசா நடிப்புக்கு அலட்டிக்காம சும்மா வந்துட்டு வசனத்த பேசிட்டு போறாரு.. தம்பி ராமையா, வழக்கமான தன்னோட காமெடியா படத்த கலகலப்பாக்க முயற்சி செஞ்சிருக்காரு.. ஆனா அது படத்துக்கு எந்த வகையிலயும் உதவுல..
நாயகி ஷில்பா மஞ்சுநாத் படத்துக்கு தேவையான நடிப்ப கொடுத்திருக்காங்க.. ரெடின் கிங்ஸ்லியோட காமெடி ஓகே..அதுவும் சில காட்சிகளே வந்துட்டு காணாம போய்டுறாரு..ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கு லாஜிக்தான் முக்கியம்.. ஆனா இந்த படத்துல சுத்தமா லாஜிக் இல்ல..
வில்லன் நடிப்பும் பெருசா எடுபடல.. சைக்கோ கொலைகாரன் அப்படின்னு காட்றதுக்கு வில்லன் செய்யும் செயல் அருவருக்கத்தக்க ஒன்னு..படத்துக்கு மியூசிக்கும் பெருசா கைகொடுக்கல.. எல்லாமே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு..ஒளிப்பதிவும் மிக மிக சுமார் ரகம். சுவாரஸ்யமில்லாத திரைக்கதை படத்துக்கு பலவீனமா அமஞ்சிருக்கு..
மொத்தத்துல முதல் பக்கம்.. கடைசி பக்கமா இருந்திருக்கலாம்..