Saturday, April 18
Shadow

 படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்

படையாண்ட மாவீரா.. மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குருவோட வாழ்க்கையில நடந்த சில சம்பவங்கள கொஞ்சம் கற்பனை கலந்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கு.. காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதோடு, சாதி பாகுபாடுகளை தவிர்த்து, எல்லோரையுமே தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் பார்த்த மாவீரராக காட்டியிருக்காங்க..

 

காடுவெட்டி குரு கதாபாத்திரத்துல நடிச்சிருக்கற இயக்குநர் வ.கெளதமன், சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்து ஏரியாவிலுமே நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு. உணர்ச்சிகரமான வசனங்கள் பேசும் காட்சிகளில் நெருப்பாக நடிச்சி, தன்னோட கேரக்டர்க்கு நியாயம் சேர்த்திருக்காரு..

 

நாயகி பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில தலை காட்டுறாங்க.. அவ்வளோதான்..

காடுவெட்டி குருவின் தந்தையாக நடிச்சிருக்கற சமுத்திரக்கனி, குறைவான காட்சிகள்ல வந்தாலுமே வழக்கமான சிறந்த நடிப்ப கொடுத்திருக்காரு.. காடுவெட்டி குருவோட இளம்பருவ கதாபாத்திரத்துல நடிச்சிருக்கற தமிழ் கெளதமனோட நடிப்பும் சூப்பரா இருக்கு..

 

ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செஞ்சிருக்காங்க..

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில பாடல்கள் ஓகே ரகம்.. சாம்.சி.எஸ் ஓட பின்னணி இசையில சில இடங்கள்ல கவனம் ஈர்க்குது..

 

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்காரு.. சண்டைக்காட்சிகள்ல கடுமையாக உழைப்ப குடுத்துருக்காரு..

 

ரவுடியாகவும், சாதி வெறியராகவும் பார்க்கப்படுற மறைந்த காடுவெட்டி குருவை, மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடிய நேர்மையான மனிதராக காட்டும் ஒரு  படைப்பாக கொடுக்க முயற்சி செஞ்சிருக்காரு இயக்குனர்..

காடுவெட்டி குரு மீதான தவறான பிம்பத்தை உடைக்குற விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைச்சிருக்காரு.. மொத்தத்துல படையாண்ட மாவீரா… குறிப்பிட்ட சாதியினருக்கான படமா இல்லாம அனைத்து தரப்புக்குமான படமா கொடுக்க நினச்ச இயக்குனரோட எண்ணத்துக்கு பாராட்டுக்கள்..