
பாக்யராஜ் இயக்கத்துல வெளியான பிளாக் பஸ்டர் ஹிட்டடிச்ச படம் அந்த 7 நாட்கள். இப்போ அதே தலைப்புல புதுமுகங்கள் நடிச்சு உருவாகியிருக்கு.. வாங்க இந்த படத்தோட விமர்சனத்தை பாக்கலாம்.. படத்தோட கதை என்னன்னா.. ஹீரோ வினீத் தேஜா வானியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு படிச்சிட்டு இருக்காரு.. வழக்கம் போல நாயகிய பார்த்ததும் அவருக்கு காதல் வந்திருது.. இருவரும் காதலிக்கறாங்க.. ஒருநாள் வானத்துல சூரியன் கிரகணத்த பத்தி டெஸ்க்கோப்ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு.. வழக்கமான டெலஸ்கோப் யூஸ் பண்ணாம பழமையான டெலஸ்கோப் வெச்சு பாத்துட்டு இருக்கும்போது, திடீரென ஹீரோவோட கண்ல சூரிய ஒளி பட்டுருது.. அதுக்கு அப்புறம் அவரோட கண்ணுக்கு மிகப் பெரிய பவர் வந்திருது.. என்ன பவர்னா ஹீரோ யார் கண்ண நேருக்கு நேர் பாக்குறாரோ அவங்க எப்ப சாகப்போறாங்கன்னு நாயகனுக்கு தெரிஞ்சிரும்.. ஹீரோயின் கண்ண ஹீரோ நேருக்கு நேர் பாக்குறாரு நாயகி இன்னும் 7 நாட்கள்ல சாகப்போறாங்கன்னு தெரிஞ்சு அதிர்ச்சி அடையுறாரு ஹீரோ.. இறுதியில நாயகிக்கு என்ன ஆச்சு? இந்த பிரச்சினையில இருந்து ஹீரோ மீண்டாரா? ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தாங்களா இதுதான் படம்..
நடிகர் வினீத் தேஜா நல்ல நடிப்பை கொடுத்திருக்காரு.. ஆரம்பத்துல காதல் வயப்பட்டு நாயகி பின்னாடி சுத்துரறது.. நாயகி சாகப்போறாங்கன்னு தெரிஞ்சதும் உடைஞ்சு அழுகுறது.. காதலிய காப்பத்த எந்த எல்லைக்கும் போறது அப்படின்னு சூப்பரான நடிப்ப வெளிப்படுத்தி இருக்காரு.. நாயகி ஸ்வேதா அழகா இருக்காங்க.. நல்லாவும் நடிச்சிருக்காங்க.. கிளைமாக்ஸ்ல உருக்கமான நடிப்ப கொடுத்திருக்காங்க..
கே.பாக்யராஜ், நமோ நாராயணன் , சுபாஷிணி, தலைவாசல் விஜய் உள்ளிட்டவங்களும் படத்துக்கு தேவையான நடிப்ப கொடுத்திருக்காங்க.. சச்சின் சுந்தர் இசையில பாடல்கள் ஓகே.. பின்னணி இசை நன்று.. கோபிநாத்தோட கேமிரா கொடைக்கானல் அழகை சூப்பரா படம் பிடிச்சிருக்கு..
சமீபத்துல தமிழ்நாடு முழுக்க தெருநாய்க்கடி சம்பவங்கள் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கற நிலையில தேவையான சமயத்துல விழிப்புணர்வு படமா கொடுத்திருக்காரு இயக்குனர் சுந்தர்.. முதல் பாதி நாயகன் அறிமுகம், காதல் என போகுது.. இரண்டாம் பாதி முக்கியமான விஷயத்தை பேசியிருக்கு.. ஆனா இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.. மொத்தத்துல இப்ப இருக்குற பிரச்சினையை காதல், ஃபேண்டஸி கலந்து ரசிக்கற அளவுக்கு சொல்லியிருக்காங்க…
