Wednesday, October 22
Shadow

மரியா திரைவிமர்சனம்

அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்க, சாய்ஸ்ரீ பிரபாகரன்,பவேல் நவகீதன்,சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் “மரியா”. ஒளிப்பதிவு – ஜி. மணிஷங்கர்,இசை – கோபாலகிருஷ்ணன் & பரத் சுதர்ஷன்.

இளமை காலத்திலேயே தன்னை கன்னியாஸ்திரியாக மாற்றிக் கொண்ட சாய் ஸ்ரீ பிரபாகர் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்தக்கார பெண்ணான சித்து குமரேசன் தங்கி இருக்கும் வீட்டுக்கு வருகிறார் , சித்து தன் பாய் ஃப்ரெண்ட் பவேல் நவகீதன் கூடலிவிங் டுகெதர் ஆக தங்கி இருக்காங்க.அவுங்க கூடவே இன்னும் இரண்டு பேர் தங்கி இருக்காங்க. ஒரு ஃபோன் கூட இல்லாமல் கன்னியாஸ்திரியாக இருக்கின்ற சாய் ஸ்ரீக்கு இவங்களுடைய வாழ்க்கை முறையும் பழக்க வழக்கங்களும் புதுசாக தெரியுது. சாய் ஸ்ரீ ஹாஸ்டல்ல எப்படி இருந்தாங்களோ அதே மாதிரி ஆரம்பத்துல நடந்துக்கிறாங்க ,ஆனால் சித்துவின் வற்புறுத்தலினால் சாதாரணமாக பெண்கள் அணியும் ஆடைகளை சாய் ஸ்ரீ உடுத்திகிறாங்க, இந்த சூழ்நிலையில் அந்த வீட்டின் மாடியில் ஒரு பார்ட்டி நடக்குது. போதையில இருக்கின்ற நவநீதன் தனியா கீழ் அறையில் தங்கி இருக்கிற சாய் ஸ்ரீ கிட்ட தவறா நடந்துக்க முயற்சி செய்கிறார்.அதுவரை கட்டுப்பாடோடு இருக்கிற சாய் ஸ்ரீயும் தன் நிலை மறக்க , இருவரும் தங்களை மறந்து உணர்ச்சி வசப்படுகிறார்கள், ஒரு கட்டத்தில் தாங்கள் யார் என்பதை புரிந்தவுடன் விலகிப் போறாங்க, இந்த இந்த நிகழ்வு சாய் ஸ்ரீக்கு குற்ற உணர்ச்சியாகவும், மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்து போக, உடனே அந்த வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து ,ஊருக்கு அம்மாவை தேடி போறாங்க, சாய் ஸ்ரீ இனிமேல் தன்னால கன்னியாஸ்திரிய இருக்க முடியாதுன்னு, சராசரி பெண்ணாக இருக்க ஆசைப்படுறதா அம்மாகிட்ட சொல்றாங்க இதை அவரோட அம்மா ஏத்துக்கிற மறுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்புறாங்க. இதன்பிறகு சாய் ஸ்ரீ என்ன முடிவு எடுத்தாங்க? அந்த முடிவின் விளைவுகள் என்ன? அப்படிங்கறதுதான் மரியா படத்துடைய மீதி கதை.

 

 

சாய் ஸ்ரீ பிரபாகர் இந்த கதாபாத்திரத்துக்கு சரியான பொருத்தம் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு அவருடைய நடிப்பு வியக்க வெச்சிருக்கு. பல்வேறு காட்சிகளில் அனுபவம் மிக்க நடிகைகளோடு ஒப்பிடும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை அவர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்காங்க.

ஒட்டுமொத்த கதையிலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களே இடம் பெற்று இருந்திருந்தாலும் அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில்,படத்தில் நன்கு நடித்த அத்தனை நடிகர்களுக்கும் பாராட்டுக்கள், குறிப்பாக கனமான கதாபாத்திரத்தை சுமந்து இருக்கிற பாவல் நவநீதன்,சித்து மற்றும் பிற கதாபாத்திரங்களும் சாய் ஸ்ரீயின் கதாபாத்திரத்திற்கு துணையாகவும் படத்திற்கு பக்க பலமாகவும் இருந்திருக்காங்க.

அரவிந்த் கோபாலகிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்சன் இவர்களின் இசை படத்திற்கு முக்கிய பலமாக அமைந்திருக்கு.குறைவான வெளிச்சத்துக்குள்,குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படமாக்கி இருக்கின்ற மணி ஷங்கரின் ஒளிப்பதிவு டாக்குமென்ட்ரி படம் போல இருந்திருந்தாலும், இன்னும் கொஞ்சம் காட்சிகளை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தால் மரியாவை மேலும் அழகுப்படுத்தி இருக்கலாம்.

விருப்பத்தின் பேரிலே அல்லது சூழ்நிலையாலோ தள்ளப்பட்டு கன்னியாஸ்திரியாக மாறிய பிறகு ஒரு கட்டத்தில் அவற்றை சுமையாக நினைக்கும் இளம் பெண்ணின் மனப்போராட்டங்களை தைரியமாக வெளிப்படுத்தியிருக்காரு மரியா படத்தை இயக்கியிருக்கும் ஹரி கே சுதன்.

படத்தில் நிறைகள் நிறைய இருந்தாலும் சில விரசமான காட்சிகளை நீக்கி இருந்தால், சொல்ல வந்த ஆழமான,மிக நுட்பமான கருத்தை, யார் மனமும் புண்படாத வகையில் வெளிக்காட்டி இருக்கலாம், அதனால் அநேகமாக யு சான்றிதழ் பெற்று ,அனைத்து தரப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற படமாக மரியா அமைந்திருக்கும். எப்படி இருப்பினும் புது முயற்சியை இயக்குனர் தைரியமாக கையாண்டு இருப்பதை பாராட்டலாம்