
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அசோக் செல்வன் தெகிடி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ஹிட் கொடுத்தார்.
ஆரம்பமே மாறுபட்ட கதையை தேர்வு செய்த அசோக் செல்வன் இப்போது வரை கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் மூலம் தொடர்ந்து இவரின் படங்கள் ஹிட்டாகி வருகின்றன.
இறுதியாக கூட அசோக் செல்வன் நடிப்பில் வெளியான புளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இவரின் மனைவி கீர்த்தி பாண்டியன் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கீர்த்தி பாண்டியனும் ஆரம்பம் முதலே நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இறுதியாக இவர் நடித்த கண்ணகி படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இப்போது வரை மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடியாக நடத்தியுள்ள ரொமாண்டிக் போட்டோ ஷூட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
