
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய், ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். ஃபேமிலி என்டர்டைன்மென்டாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். வாரிசு படத்தின் டிரைலர் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படம் நிச்சயம் ஹிட்டு கொடுக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். வாரிசு படத்தின் முதல் விமர்சனம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
வாரிசு படத்தை சென்சாரில் பார்த்த ஒருவரிடம் இருந்து இந்த விமர்சனம் கிடைத்துள்ளது. எமோஷனல் காட்சிகளில் விஜய் சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதேபோல் படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கின்றது. அப்பா, அம்மா இருவருடனும் மகனான விஜய்யின் உறவை பேசும் படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
அதேபோல் படத்தின் முதல் பாதியை குறைத்து இருக்கலாம். அதுதான் குறையாக இருந்தது. மற்றபடி நடிகர்கள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு 3.5 ரேட்டிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
