Saturday, April 18
Shadow

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் – பின்னணி பாடகி சைந்தவி ஜோடியின் திருமண புகைப்படங்கள்….!!!!!

தனது அற்புதமான குரல் மற்றும் இசையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ். இவரது பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன.

இப்போது இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் தமிழில் கலக்கி வருகிறார். வாரம் தவறாமல் ஜீவியின் படம் வெளியாகி விடுகிறது. இறுதியாக கூட ஜீவி பிரகாஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டியர் படம் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் ஜீவி பிரகாஷ் சைந்தவியின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சைந்தவி தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

ஜீவி பிரகாஷ் திருமணத்தில் இயக்குனர்கள் பாக்கியராஜ், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் வந்திருந்தனர். அதேபோல நடிகர் சூர்யா இறுதி அமர்ந்து திருமணத்தை முடித்து விட்டு தான் சென்றார்.