சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்” இயக்குநர் ஆர்.கே. செல்வமணி
சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்" இயக்குநர் ஆர்.கே. செல்வமணி!*
டிவா (டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எஃபெக்ட்ஸ் அசோசியேஷன்) 25வது கிராஃப்ட்டாக அங்கீகரிக்க வேண்டி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
திவா வைஸ் பிரசிடெண்ட் கலரிஸ்ட் முத்து, "இந்த நிகழ்விற்கு வருகை புரிந்திருக்கும் இயக்குநர்கள் செல்வமணி, ரவிக்குமார் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறோம். நிறைய பேருக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், விஎஃப்எக்ஸ் பற்றி தெரிந்திருக்கும். ஆனால், டிஐ பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கு ஏற்ற நல்ல விஷூவல் கொண்டு வரும் புராசெஸாக டிஐ இருக்கிறது. தொழில்நுட்ப ககைஞர்களுக்கு என ஒரு அசோஷியேஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. கலரிஸ்ட், டிஐ, விஎஃப்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விருதுகளும் வ...









