நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து திறமையான நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!*
*நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து திறமையான நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!*
நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி நிகில் பற்றி கூறும்போது, “திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிக...









