
மாஸ் நாயகன் என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா…’ இப்போது வெளியாகியுள்ளது!*
*மாஸ் நாயகன் என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா...’ இப்போது வெளியாகியுள்ளது!*
கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாகி உள்ளது. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே ஆகியோர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்க, மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.
சமீபத்தில், இந்தப் படத்தில் இருந்து வெளியான ‘ஃபியர் சாங்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அனைத்து தளங்களிலும்...