எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!
கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கென ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார்.
அதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக வெளியே வந்த ஓவியா சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொர...

