பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
*’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”.
தயாரிப்பாளர், நடிகர் ஹரி, "'பராரி' படம் எங்களுடைய சின்ன முயற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்".
நடிகை சங்கீதா, “இதுதான் என்னுடைய முதல் படம். எங்கள் அனைவருடைய உழைப்பும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இவர்கள் எல்லாரிடம் இருந்தும் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கும் நன்றி”.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் முடித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமுருகனின் உதவியாளர் எழில் என்னிடம் வந்து இந்த கதையை படிக்க சொல்லி கொடுத்தார...









