
பிரபல நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை நமீதா.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த நமீதா பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் தான் நடித்துள்ளார். அதனால் தானோ என்னவோ இவருக்கு ஒருகட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தன.
அந்த சமயத்தில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நமீதா போட்டியாளராக களமிங்கி மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அவரின் நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருப்பதியில் வைத்து மிகவும் எளிமையான முறையில் நமீதா திருமணம் செய்து கொண்டார்.
அதன்படி இவர்களின் திருமணம் திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் மிகவும் சிம்ப்பிளாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திரைபிரபலங்கள் என்றால் நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகா ஆகிய இருவரும் நமீதாவின் திருமணத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.