
தாய் கிழவி.. இந்த படத்தோட கதை என்னன்னு பாத்தோம்னா.. ராதிகாக்கு மூனு பசங்க, ஒரு பொண்ணு.. ஊர்ல வட்டிக்கு விட்டு காசு சம்பாதிக்குறாங்க. அவங்கள கண்டா ஊரே பயந்து நடுங்கும்.. ஒரு பொம்பளையா இருந்து தானே கஷ்டப்பட்டு உழச்சு சொத்து சேர்த்து வெச்சிருக்காங்க.. சொத்த பிரிச்சு கேட்டதால பெத்த பசங்களலையே வீட்டுக்குள்ள சேக்காம இருக்காங்க. ஒருநாள் ராதிகா பக்கவாதத்துல படுக்க, இப்பவோ அப்பவோன்னு இழுத்துட்டு இருக்கு அவங்க உசுரு… இந்த நிலையில ராதிகா இவ்ளோநாள் சேர்த்துவெச்ச சொத்த எங்கயோ ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு பசங்களுக்கு தெரிய வர, எப்படியாச்சு ராதிகாவ காப்பாத்தி அந்த சொத்த அபகரிக்க நினைக்குறாங்க.. பசங்களோட கனவு நிறைவேறுச்சா, ராதிகா மறச்சி வெச்சிருக்கற சொத்து என்ன, ராதிகா உடல்நிலை சரியானாங்களா அப்படிங்கறத காமெடி கலந்து சொல்லியிருக்கற படம்தான் தாய் கிழவி..
ராதிகா.. பவுனுத்தாயாக வாழ்ந்திருக்காங்க. அவங்க மேக்கப்பும் கெட்டப்பும் நடிப்பும் ஓஹோ ரகம்.. ஊர்ல இருக்கற அத்தன பேரையும் ஒத்த ஆளா மிரட்டி வெச்சிருக்கற கிழவியா அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்காங்க.. பாதி படம் முழுக்க படுத்துகிட்டு இருக்கற கேரக்டர்தான்.. ஆனா முழு படமும் இவங்கள சுத்திதான் நகருது. கண்டிப்பா தேசிய விருது நிச்சயம்..
மகன்களாக சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன்.. மூனுபேருமே போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க.. அதுவும் கமல் ரசிகரா சிங்கம் புலி பண்ணுற அலப்பறை வேற லெவல்.. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி குணாதிசயம் கொடுத்து சூப்பரா எழுதியிருக்காரு இயக்குனர்.. அதேமாதிரி மருமகன் முத்துகுமார், ரெண்டு இட்லி அப்படிங்கற கேரக்டர்ல பிரிச்சி மேஞ்சிருக்காரு.. ஊர் மக்கள், குடிகாரனா நடிச்சவரு, முத்துக்குமார் பையனா நடிச்ச சின்ன பையன், மூணு மருமகள்கள், பக்கத்து வீட்டு பொண்ணுங்க என சின்ன சின்ன கேரக்டர்ஸ்ம் ரசிக்க வெச்சிருக்காங்க..
மகளா நடிச்சிருக்கற ரேச்சல் ரெபேகா சூப்பரா நடிச்சிருக்காங்க.. தன்னோட அம்மா ராதிகாவ பத்தி இவங்க பேசுற இடம் கண்கலங்க வைக்குது.. முனீஸ்காந்த் கேரக்டர் ரொம்பவும் சூப்பரா இருக்கு.. அவரும் கலக்கி இருக்காரு.. இப்படி படத்துல ஒவ்வொரு கேரக்டருமே தங்களோட வேலைய கச்சிதமா பண்ணியிருக்காங்க..
விவேக் விஜயகுமாரோட ஒளிப்பதிவு படத்துக்கு பலம்னே சொல்லலாம்.. கிராமத்து அழக அற்புதமா கண்முன்னாடி கொண்டுவந்துருக்காரு.. செல்லதுரை ஆலங்குடியோட மேக்கப் நல்லாவே இருக்கு.. நிவாஸ் கே பிரசன்னா இசைவ பாடல்களும் பின்னணி இசையும் படத்த வேற தளத்துக்கு கொண்டு போய்டுச்சு..
எழுதி இயக்கி இருக்கற சிவக்குமார் முருகேசன், வழக்கமான கதையா இருந்தாலுமே திரைக்கதையில நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள சேர்த்து படத்த போர் அடிக்காம கொண்டு போய் இருக்காரு.. சில இடங்கள்ல தொய்வு இருக்கு.. பெண்களுக்கு படிப்பும், சேமிப்பு பற்றிய புரிதலும், தன்னம்பிக்கையும் எவ்ளோ முக்கியம் அப்படிங்கறத சூப்பரா பிரச்சாரம் இல்லாம சொல்லி முதல் படத்துலயே சிக்ஸர் அடிச்சிருக்காரு.. இன்றைய கால பெண்களுக்கு தாய் கிழவி ரொம்பவும் முக்கியமான படம் அப்படின்னே சொல்லலாம்.. மொத்தத்துல தாய் கிழவி.. தூள் கிழவி..
