
இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றபோதும் மெளனராகம் படத்தின் காப்பி என்று அவரை விமர்சித்தார்கள்.
அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். வசூல் ரீதியாக இந்த படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் அட்லீயை காப்பி கேட் என்றே கூறி வந்தனர்.
இப்படி தமிழில் எந்தவித அங்கீகாரமும் கிடைக்காத நிலையில் தான் அட்லீ பாலிவுட் சென்றார். கடந்த ஆண்டு ஷாரூக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. அவ்வளவு தான் அதன் பின்னர் அட்லீயின் லெவலே மாறிவிட்டது. தற்போது பாலிவுட் சினிமா அட்லீயை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.
அவர் படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். இதற்கிடையில் என்டிடிவி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 2023ஆம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான விருது அட்லீக்கு கிடைத்துள்ளது. இந்த விருது விழாவில் பாலிவுட் பிரபலங்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக மாஸ் லுக்கில் விருது பெற்ற அட்லீயின் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமா அட்லீக்கு சரியான அங்கீகாரம் கொடுக்காத நிலையில் பாலிவுட் திரையுலகம் அவரை தொடர்ந்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
