Saturday, April 18
Shadow

போர்த் ப்ளோர் திரைவிமர்சனம்

போர்த் ப்ளோர்.. இந்த படத்தோட கதை என்னன்னா.. ஐடி ஊழியரான ஆரி, தன்னோட முன்னாள் காதலி திடீர்னு உதவிகேட்க மும்பையில இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாரு.. அவர் தங்கியிருக்கற அப்பார்ட்மெண்ட்ல ஏதோ அமானுஷ்ய விஷயங்கள் நடக்குது.. அதுமட்டுமில்லாம தன்னோட முன்னாள் காதலியும் காணாம போய் இருக்கறது தெரிய வருது.. அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன, காணாமல் போன காதலி‌ என்ன ஆனாங்க அப்படிங்கற கேள்விக்கு‌பதில் தான் போர்த் ப்ளோர்..

ஆரி, ஐடி ஊழியராவும் அன்பான காதலராவும் நடிச்சிருக்காரு.. சென்னைக்கு வந்ததுக்கு அப்புறமா அவரோட அப்பார்ட்மெண்ட்ல நடக்குற அமானுஷ்ய விஷயங்கள பார்த்து ஆரம்பத்துல பயப்படுறதாகட்டும் அதுக்கு அப்புறமா உண்மைய கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிக்கறதாகட்டும் நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு.. படம்‌ முழுக்க இறுக்கமான முகத்தோடவே வர்றாரு.. நடிப்புலயும் குறையில்ல..

நாயகி தீப்ஷிகா குறைந்த நேரமே வந்தாலும் கவனிக்க வைக்குறாங்க.. மற்றொரு நாயகி பவித்ராவோட நடிப்பும் ஓகே ரகம்தான்.. சுப்பிரமணிய சிவா வில்லத்தனத்துல மிரட்டி இருக்காரு.. தலைவாசல் விஜய் தன்னோட அனுபவ நடிப்ப கொடுத்திருக்காரு.. ஆதித்யா‌ கதிர் அங்கங்கே காமெடி பண்ணியிருக்காரு..

லக்ஷ்மண் ஒளிப்பதிவு அப்பார்ட்மெண்ட் காட்சிகள் மற்றும் இரவு நேர காட்சிகள்ல திகில் படத்துக்கான‌ டோன் கொடுத்திருக்கு.. தரண்‌குமார் இசையில பாடல்கள விட பின்னணி இசை ஹாரர் படத்துக்காக பயத்த கூட்டியிருக்கு.. ராம் சுதர்ஷன் எடிட்டிங் காட்சிகளோட பரபரப்பை கூட்டியிருக்கு..

எழுதி இயக்கி இருக்கற சுந்தரபாண்டி ஹாரர் படம்‌ மூலமா ஒரு சமூக கருத்த சொல்ல நினச்சிருக்காரு.. வளர்ச்சி அப்படிங்கற பேர்ல அரசியல்வாதிகள்‌ மற்றும் அதிகாரிகள் எப்படி மக்கள ஏமாத்துறாங்க அப்படின்னு சொல்ல முயற்சி செஞ்சிருக்காங்க.. திரைக்கதையில இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தா சூப்பரான படமா‌ வந்திருக்கும்.. ஆனாலும் எடுத்துக்கொண்ட கதையை முடிஞ்ச அளவுக்கு போர் அடிக்காம சொல்லியிருக்காங்க.. படக்குழுவுக்கு வாழ்த்துகள்..