Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

குற்றம் புதிது – திரை விமர்சனம்

குற்றம் புதிது – திரை விமர்சனம்

Review
குற்றம் புதிது - திரை விமர்சனம் நடிப்பில்: தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர். இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கிய குற்றம் புதிது அமானுஷ்யத் திரில்லர் வகையில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பாக அமைந்துள்ளது. மர்மம், பரபரப்பு மற்றும் மனித உணர்வுகளை திறம்பட இணைத்துள்ள இந்தக் கதை, வாழ்க்கை–மரணம் மற்றும் உண்மை–மாயை இடையிலான மெல்லிய கோட்டைக் கொண்டு விளையாடுகிறது. அமைதியான சிற்றூரை மையமாகக் கொண்ட கதை, மதிப்புமிக்க ஒருவரின் அதிர்ச்சிகரமானக் கொலையுடன் தொடங்குகிறது. வழக்கமான விசாரணை தொடங்கியவுடனேயே கதை எதிர்பாராத திருப்பம் எடுக்கிறது—இறந்தவர் உயிருடன் மீண்டும் தோன்றுவதாகக் காட்சியளிக்கிறார். இந்த அமானுஷ்ய சம்பவம் கதையை வேறொரு பரிமாணத்தில் கொண்டு செல்கிறது. நீதியுணர்வு, கடந்த கால பாவங்களின் சுமை, மீட்பு ஆகியவை கதைமுழுவதும் வ...
வீர வணக்கம் திரைவிமர்சனம்

வீர வணக்கம் திரைவிமர்சனம்

News
நடிகர்கள் : சமுதிரக்கனி, பரத், சுரபி லட்சுமி, ஐஸ்விகா, ரிதேஷ், பிரேம்குமார், பி.கே.மேதினி இசை : எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சிஜே குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஒளிப்பதிவு : கவியரசு இயக்கம் : அனில் வி.நாகேந்திரன் தயாரிப்பு : விசாரத் கிரியேஷன்ஸ்   கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும் ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதை.   தமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதோடு, சாதி, ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவருடனும் சகஜகமாக பழகுகி...
ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

News
*ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்* *ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் திரைப்படம்* ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய படம் இன்று பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது 'ஒர்க்கர்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்களால் "ஒர்க்கர்" திரைப்படம் நிறைந்திருக்கும் என்று இயக்குநர் வினய் கிருஷ்ணா நம்பிக்கை ...
கடுக்கா திரைவிமர்சனம்

கடுக்கா திரைவிமர்சனம்

Review
கடுக்கா திரைவிமர்சனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நகைச்சுவை படம் என்று தான் சொல்ல வேண்டும் நம்மை 1980 க்கு இழுத்துச் சென்ற ஒரு உணர்வை இந்த படம் கொடுக்கிறது ஏன் பாக்யராஜ் அவர்களின் நேற்று இன்று நாளை இது போன்ற படங்களை நம் நினைவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு சிறப்பான படம் தான் இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதற்கு சான்று இந்த படம். விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா இயக்கம் : எஸ்.எஸ். முருகராசு இசை : கேவின் டிகாஸ்ட் ‘கடுக்கா’ – காதல் தொல்லையை நகைச்சுவையோடு சொல்லும் எதார்த்தக் கதை வேலைக்குச் செல்லாமல், அம்மாவின் உழைப்பில் வாழும் நாயகன் விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே குடியேறும் ஸ்மேஹாவை பார்த்ததும் காதல் கொள்ள, அவரை தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். அதே சமய...
இந்திரா : பார்வையாளரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் க்ரைம் த்ரில்லர்

இந்திரா : பார்வையாளரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் க்ரைம் த்ரில்லர்

Review
இந்திரா : பார்வையாளரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் க்ரைம் த்ரில்லர் நடிகர்கள்: வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பீர்சடா, அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ்குமார், சுமேஷ் மூர், கஜராஜ் மற்றும் பலர் எழுத்து – இயக்கம்: சபரீஷ் நந்தா ஒளிப்பதிவு: பிரபு ராகவ் இசை: அஜ்மல் தக்ஷின்     ---   சஸ்பென்ஷனில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான “இந்திரா”, பார்வையாளரை கவரும் விதத்தில் பல வித்தியாசமான அம்சங்களுடன் திரைக்கதை நகர்கிறது.   கதை, குடிப்பழக்கத்தால் தனது கண் பார்வையை இழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா (வசந்த் ரவி) மற்றும் அவரது மனைவி கயல் (மெஹ்ரீன் பீர்சடா) எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சித்தரிக்கிறது. இதே சமயத்தில், அபிமன்யு (சுனில்) என்ற சைக்கோ தொடர் கொலைகாரன், காவல்துறைக்கு சவாலாக மாறுகிறார். கயலின் கொலைக்குப் பின், ...
தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா 

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா 

News
தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா   6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம்   தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார்.   சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க த...
ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை

ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை

Review
ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை   தற்போது உலகின் பல நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆயுத மோதல்கள், பொருளாதாரப் போர்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, 20 ஆண்டுகள் கழித்து — அதாவது 2047ஆம் ஆண்டில் — உலகம் எப்படி இருக்கும் என்பதை பிரமாண்டமான காட்சிகளின் மூலம் கற்பனை செய்ய முயன்றிருக்கிறது ரெட் பிளவர்.   கதை 2047ஆம் ஆண்டில் நடக்கிறது. மூன்றாவது உலகப்போர் முடிந்த பின், பல நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவத் தலைவர் மால்கம், இந்தியாவையும் குறிவைக்கிறார். இந்திய பெண்களை உலகம் முழுவதும் சித்திரவதை செய்து கொலை செய்வது, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நாச வேலைகள் செய்வது போன்ற நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இதனைத் தடுக்க, இந்திய உளவுத்துறை அதிகாரி விக்னேஷின் தலைமையில் அரசு “ஆபரேஷன் ரெட் பிளவர்” மேற்கொள்கிறது. அந்த ஆபரேஷன் என்ன? விக்னேஷ்...
திரைப்படம்: நாளை நமதே விமர்சன மதிப்பீடு

திரைப்படம்: நாளை நமதே விமர்சன மதிப்பீடு

Review
🎬 திரைப்படம்: நாளை நமதே விமர்சன மதிப்பீடு: ⭐⭐⭐¾ / 5 இயக்கம்: வெண்பா கதிரேசன் (அறிமுகம்) தயாரிப்பு: அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா, ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V. ரவிச்சந்திரன் --- கதை சிவகங்கை மாவட்ட கிராமத்தில் மேலத்தெரு – கீழத்தெரு என பிரிந்து வாழும் மக்கள். ஜாதி வேறுபாட்டை பொருட்படுத்தாமல் செவிலியராக சேவை செய்யும் அமுதா (மதுமிதா) அனைவரின் அன்பையும் பெறுகிறார். கிராமம் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது. தன் மக்களுக்காக தேர்தலில் நிற்க முடிவு செய்கிறார். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் முறிகிறது, உறவினர்களும் எதிர்க்கிறார்கள். இவள் வெற்றி பெறுகிறாளா? அல்லது ஜாதி வெறி அவளை விழுங்குகிறதா? என்பதே மீதிக்கதை. --- நடிப்பு மதுமிதா (அமுதா) – சாதாரண பெண்ணின் முகச்சாயல் இருந்தாலும், தன்னலமற்ற போராட்டக் கதாபாத்திரத்த...
காத்து வாக்குல ஒரு காதல் – மோதலும் காதலும் சந்திக்கும் திரையுலகு

காத்து வாக்குல ஒரு காதல் – மோதலும் காதலும் சந்திக்கும் திரையுலகு

Review
  காத்து வாக்குல ஒரு காதல் – மோதலும் காதலும் சந்திக்கும் திரையுலகு படம்: காத்து வாக்குல ஒரு காதல் இயக்கம்: மாஸ் ரவி நடிப்பு: மாஸ் ரவி (இரு வேடம்), லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சூப்பராயன், கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர் தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி தயாரிப்பு: எழில் இனியன் இசை: ஜிகேவி & மிக்கின் அருள்தேவ் ஒளிப்பதிவு: ராஜதுரை & சுபாஷ் மணியன் பிஆர்ஓ: குமரேசன் இரண்டு விதமான கதையமைப்புகளும் உணர்வுகளும் மோதும் இப்படத்தில், ஜீவா (மாஸ் ரவி) மற்றும் மேகா (லட்சுமி பிரியா) இருவருக்கும் இடையேயான காதல் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தொடங்குகிறது. ஆனால், ஜீவாவின் இரட்டை முகங்கள் – ஒரு பக்கம் மென்மையான காதலர், மறுபக்கம் ரவுடி – மேகாவை குழப்பத்திற்கு உட்படுத்துகின்றன. இதனிடையே, ஜீவாவை பல்லவி (மஞ்சு) என்பவள் காதலிக்க ஆரம்பிப்பதுடன், ஒரு முக்கோண கா...
காயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

காயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

News
'கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் ' *காயல்* பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன். காயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.   விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்துவருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்...