யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை “
யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்
R. K. வித்யாதரன்
Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் " ஸ்கூல் "
இந்த படத்தில் யோகிபாபு,பூமிகா சாவ்லா,கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் இயக்குனர்
R. K. வித்யாதரன் யோகி பாபு பற்றி பகிர்ந்தவை....
சமீபத்தில் நடந்த யோகி பாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர்.
என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடிய நடிகர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார்.
ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வ...









