கடுக்கா திரைவிமர்சனம்
கடுக்கா திரைவிமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நகைச்சுவை படம் என்று தான் சொல்ல வேண்டும் நம்மை 1980 க்கு இழுத்துச் சென்ற ஒரு உணர்வை இந்த படம் கொடுக்கிறது ஏன் பாக்யராஜ் அவர்களின் நேற்று இன்று நாளை இது போன்ற படங்களை நம் நினைவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு சிறப்பான படம் தான் இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதற்கு சான்று இந்த படம்.
விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா
இயக்கம் : எஸ்.எஸ். முருகராசு
இசை : கேவின் டிகாஸ்ட்
‘கடுக்கா’ – காதல் தொல்லையை நகைச்சுவையோடு சொல்லும் எதார்த்தக் கதை
வேலைக்குச் செல்லாமல், அம்மாவின் உழைப்பில் வாழும் நாயகன் விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே குடியேறும் ஸ்மேஹாவை பார்த்ததும் காதல் கொள்ள, அவரை தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். அதே சமய...









