திரைப்பட விமர்சனம்: ஹரி ஹர வீர மல்லு
திரைப்பட விமர்சனம்: ஹரி ஹர வீர மல்லு – 3.25/5
இயக்கம்: கிரிஷ்
நடிப்பு: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர், சுனில்
இசை: எம்.எம். கீரவாணி
1600 ஆம் ஆண்டு பின்னணியில் அமைந்துள்ள “ஹரி ஹர வீர மல்லு” திரைப்படம், அடிமைச் சூழலிலிருந்து எழுந்து புரட்சியை உருவாக்கும் ஒரு போராளியின் கதை. சத்யராஜ் வழிகாட்டும் குருகுலத்தில் வளர்ந்த பவன் கல்யாண், வைரங்களை திருடும் வழியாக ஏழை மக்களுக்கு உதவுகிறார். அவருடைய இலக்காக உருவாகும் ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போராடும் பயணம் தான் படத்தின் மையக்கரு.
நடிப்பும் கதையின் இயக்கமும்:
பவன் கல்யாண், மாஸ், ஆக்ஷன், மற்றும் காமெடியில் கலந்த கலவையாக தன்னம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். சில சாகச காட்சிகளில் அவர் பறந்து வருவது போன்ற காட்சிகள் ஓவராக இருந்தாலும், அவரது ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள் என்பத...









