கடைசி உலகப் போர் திரைப்படத்தில் 10 தலை ராவணன் போல காட்சி அளிக்கும் ஹிப்பாப் ஆதி
நடிகர்கள்: ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை இயக்கி இசையமைத்து இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி
படத்துக்கு ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கண்ணோட்டத்தில் கடைசி உலகப் போரைப் பார்க்கிறோம். இது 2028; மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது, உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளன. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு சவாலாக உள்ளது. ரிபப்ளிக் நாட்டிற்கு அடிபணிய மறுக்கு...









