Wednesday, October 1
Shadow

இளையராஜா பயோபிக் அறிமுக விழாவில் பங்கேற்ற கமல் பாரதிராஜாவின் கலக்கல் புகைப்படங்கள்….!!!

கோலிவுட்டில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்து இப்போது வரை இசை என்றால் அது இளையராஜா தான் எனும் அளவிற்கு பெயர் பெற்றிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா.

 

இவரின் பாடல்கள் என்றும் மனதை விட்டு நீங்காதவை. இந்நிலையில் இவரின் பயோபிக்கை படமாக எடுக்க இருப்பதாகவும், அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிப்பதாகவும் செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து அந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

 

முக்கியமாக இளையராஜா, உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர்.

 

தற்போது இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.