Saturday, January 3
Shadow

யெல்லோ திரைவிமர்சனம்

யெல்லோ.. இந்த படத்தோட கதை என்னன்னா.. நாயகி பூர்ணிமா ரவி ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்த சேர்ந்தவங்க..‌ அவங்களுக்கு ஒரு லவ்வர்.. ரெண்டு பேரும் உயர் படிப்புக்காக வெளியூர் போய் அங்கேயே நல்ல வேலையில சேர்ந்து வாழ்க்கைய நல்லா வாழணும்னு ஆசை.. ஆனா எதிர்பாராத விதமா நாயகியோட அப்பாவுக்கு பக்கவாதம் வர, பூர்ணிமா ரவி வேலைக்கு போக‌ வேண்டிய சூழல், இதுனால காதல் கைவிட்டுப்போகுது..வேலை, குடும்ப பொறுப்பு என போகுற வாழ்க்கை கடுப்பாக, மன நிம்மதிக்காக சின்ன வயசு நண்பர்கள தேடி கேரளா போறாங்க நாயகி.. அங்க ஹீரோவோட அறிமுகம் கிடைக்குது.. அவருக்கும் ஒரு பின் கதை சொல்லப்படுது, நாயகியோட திட்டத்துக்கு நாயகனும் உதவ முன்வர, ரெண்டு பேரும் சேர்ந்து நண்பர்கள கண்டுபிடிச்சாங்களா?, இந்த பயணம் ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் எந்த மாதிரியான தாக்கத்த ஏற்படுத்துது அப்படிங்கறதுதான் யெல்லோ…

 

நாயகிய முன்னிறுத்துற படத்துல தன்னோட கேரக்டர நல்லா உணர்ந்து நடிச்சிருக்காங்க பூர்ணிமா ரவி.. ஒருவிதமான வீக்கான மனநிலையை தன்னோட முகத்துலயே வெளிப்படுத்தி அழகா நடிச்சிருக்காங்க.. கதையை முழுசா உள்வாங்கி ஒரு மிடில் கிளாஸ் பெண்ணோட அத்தனை உணர்வுகளையுமே பளிச்சின்னு வெளிப்படுத்தியிருக்காங்க.. நிச்சயமா அவங்களுக்கு இதுவொரு பெயர் சொல்ற‌ படமா இருக்கும்..

 

ஹீரோ வைபவ் முருகேசன், அவர‌ பார்த்தாலே ஒரு எனர்ஜி வருது.. ஒரு பாசிட்டிவ் உணர்வு ஏற்படுது.. படம் முழுக்க அந்த பாசிட்டிவ் உணர்வ பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்காரு.. அவரோட கேரக்டர சிறப்பா செஞ்சிருக்காரு.. ஆரம்பத்துல அவரோட கேரக்டர வேற‌மாதிரி காட்டிட்டு பின்னாடி அதையே இன்னும் வேற மாதிரி காட்டியிருக்கறது ரசிக்க வைக்குது..

 

நமிதா கிருஷ்ணமூர்த்தி, டெல்லி கணேஷ், பிரபு சாலமன் உள்பட அனைவருமே கொடுத்த வேலையைச் செஞ்சிருக்காங்க.. போன்ல பேசுற நண்பரோட பேச்சும் சூப்பர்..

 

ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் படத்தோட இன்னொரு ஹீரோ அப்படின்னே சொல்லலாம்.. ஒரு நல்ல ஃபீல் குட் படத்துக்கு தகுந்தமாதிரி காட்சிகள அவ்ளோ அழகா காட்டியிருக்காரு.. வாழ்த்துகள்..

ஆனந்த் காசிநாத்தோட பின்னணி இசை நல்லா இருக்கு.. கிளிப்பி கிறிஸோட மியூசிக்ல பாடல்கள் ஓகே..

 

“உன்னை வீக் ஆக்குற பவரை இன்னொருத்தருக்கு கொடுக்காத”

“ஒரு டைம்ல வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா நம்ம வாழ்க்கையில நாமளே இருக்க மாட்டோம்.. So find your self” போன்ற‌ வசனங்கள் கவனிக்க வைக்குது..

 

இரண்டாம் பாதியில பூர்ணிமாவோட பயணத்துக்கான தேவையை இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லியிருக்கலாம்.. ஒருசில குறைகள் இருந்தாலும் தமிழில் ஒரு அழகான மலையாள சினிமா பார்த்த உணர்வ இயக்குனர் ஹரி மகாதேவன் கொடுத்திருக்காரு.. எந்த பிரச்சனையை கண்டும் தேங்கி நிற்காம கடந்து செல்ல வேண்டும்.. தன்னை வென்றால்தான் வாழ்க்கையை வெல்ல முடியும் அப்படிங்கறத அழகான திரைக்கதை மூலமா சொல்லி பாஸ் மார்க் வாங்கி இருக்காரு இயக்குனர் ஹரி மகாதேவன்.. மொத்தத்துல யெல்லோ .. வானவில்…