Saturday, June 27
Shadow

மேட் இன் கொரியா விமர்சனம் 

மேட் இன் கொரியா விமர்சனம்

நாயகி பிரியங்கா மோகன் ஊட்டியில தன்னோட அப்பா அம்மா கூட வாழ்ந்துட்டு இருக்காங்க.. இவங்களுக்கு கொரியா போகணும் அப்படிங்கறதுதான் வாழ்நாள் லட்சியம்.. இவங்களுக்கு ஒரு காதலும் இருக்கு.. இவங்க காதலுக்கு அப்பா எதிர்ப்பு தெரிவிக்கவே ஊரை விட்டு ஓடிப்போறாங்க.. நாம ரெண்டு பேரும் கொரியா போலாம்னு சொல்ற காதலன் இவங்கள மட்டும் கொரியாவுக்கு அனுப்பிட்டு நாயகியோட பணத்தோட லவ்வர் எஸ்கேப் ஆகிடுறாரு.. தன்னந்தனியாக மொழி தெரியாத நாட்டுல சிக்கிக்கிட்ட நாயகிக்கு கிடைக்குற அனுபவங்கள் தான் இந்த படம்…

 

நித்தம் ஒரு வானம் படம் மூலமா கவனிக்க வெச்ச ரா.கார்த்திக் இந்த படத்த எடுத்திருக்காரு.. ஒரு பெண் தன்னோட கனவுகள சுமந்து கிட்டு மொழி தெரியாத நாட்டுல அனுபவிக்குற பயணங்கள இந்த படத்துல அழகா சொல்லியிருக்காரு.. கூடவே பாசம், லட்சியம், மனித உணர்வுகள், நட்பு என அனைத்தையும் உணர்வுப்பூர்வமா சொல்லியிருக்காரு.

 

முதன்மை வேடத்துல நடிச்சிருக்கற பிரியங்கா மோகன் அருமையான நடிப்பை கொடுத்திருக்காங்க.. பாசம், குறும்பு, லட்சியம், ஏமாற்றம், வைராக்கியம் என எல்லாத்தையும் வெளிப்படுத்த கேரக்டர்.‌ அதுக்கு தன்னோட நடிப்பால நியாயம் செஞ்சிருக்காங்க.. ஆனா சில இடங்கள்ல மிகை நடிப்பா தெரியுறது கொஞ்சம் ஏமாற்றம்.. கொரியால போய் தனக்கு தெரிஞ்ச இங்லீஷ்ல பேசி சிரிக்க வெச்சிருக்காங்க.. இவங்களுக்கும் கொரியா பாட்டிக்குமான பிணைப்பு சூப்பரா இருக்கு..

 

படத்துல நடிச்ச மற்ற கொரியன் நடிகர்களும் தங்களோட நல்ல நடிப்ப கொடுத்திருக்காங்க.. லவ்வரா வர்ற ரிஷிகாந்த், ஜென்சன் திவாகர் உள்ளிட்டவங்களும் படத்துக்கு தேவையான பங்களிப்பை பண்ணிருக்காங்க..

 

பிரசன்ன குமாரோட ஒளிப்பதிவுல ஊட்டியோட அழகும் கொரியாவோட அழகும் கண்களுக்கு விருந்தா இருக்கு. ஹசீம் அப்துல் வகாபோட மியூசிக்ல பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்லாவே இருக்கு..

 

தமிழ்நாட்ல இருந்து மொழி தெரியாத நாட்டுக்கு போகுற பெண்ணோட அனுபவங்கள எமோஷனல் கலந்து காமெடியாக சொல்லியிருக்காரு இயக்குனர் ரா.கார்த்திக்.. தாய் கிழவி படத்துல வர்ற மாதிரியே பெண்கள் தனியாக, சுதந்திரமாக வாழ சுய மரியாதையோட தங்களுக்கு பிடிச்சதை செய்யும் உரிமையை இந்த படம் பேசுகிறது.. மொழி தெரியாம இருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதான் அப்படின்னு அழகா புரிய வெச்சிருக்காங்க..

Related posts:

அங்கீகாரம் – ஒடுக்கப்பட்டோரின் கனவுகளுக்கு குரல் கொடுக்கும் அசாதாரண படைப்பு!

திரைப்பட விமர்சனம்: ஹரி ஹர வீர மல்லு

சாத்தான் தி டார்க்’ – திரைவிமர்சனம்

கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித...

ஆர்யன் திரைப்பட விமர்சனம்!

இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தய...

கெவி – மலைமக்களின் உளறல்... எதிர்வினையாக ஒரு போராட்டம்