
குடும்பத்துடன் கோவிலில் தரிசனம் செய்த நடிகை ரம்பாவின் அழகிய புகைப்படங்கள்….!!!
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்பா உழவன் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா படம் தான் இவரின் முதல் படமாக அமைந்தது.
அந்த படம் நல்ல வரவேற்பை பெறவே ரம்பா தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. குறைந்த காலத்திலேயே டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
இந்நிலையில் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரகுமார் என்ற தொழிலதிபரை ரம்பா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகி விட்டார் ரம்பா.
இவருக்கு லாண்யா, சாஷா என்ற இரு மகள்களும் ஷிவின் என்ற மகனும் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ரம்பா அடிக்கடி குடும்ப புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.
...