சல்லியர்கள் திரைவிமர்சனம்
அத்திப்பூ போல அரிதாக மலரும் ஒரு படைப்பு – ‘சல்லியர்கள்’
தமிழ் சினிமாவில் அரிதாகவே சில படங்கள் வெளியாகும். வணிகக் கோஷங்களில் சிக்காமல், ஒரு சமூகப் பொறுப்போடு, வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை நேர்மையாக பேசும் படங்கள் அவை. அத்தகைய அரிதான படைப்புகளில் ஒன்றாக ‘சல்லியர்கள்’ திரைப்படம் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறது.
‘சல்லியர்கள்’ என்ற பெயரே இந்தப் படத்தின் முதல் வெற்றி. போர்க்களத்தில் பணிபுரியும் மருத்துவர்களைக் குறிக்கும் இந்தச் சொல், பலருக்கு புதிதாக இருக்கும். அந்தச் சொல்லைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே இயக்குநரின் ஆய்வும், நேர்த்தியும் வெளிப்படுகிறது. இதற்காக முதலில் இயக்குநர் கிட்டுவுக்கு ஒரு நேர்மையான பாராட்டு அவசியம்.
இந்தப் படத்தின் கதைக்களம் தமிழ் சினிமா இதுவரை தொடாத ஒரு தளம். போர்க்களம் என்றால் ஆயுதம், ரத்தம், சண்டை என்ற ஒரே கோணத்தில் பார்க்கும் வழக்கத்திலிருந்து முற்றி...









