Wednesday, June 3
Shadow

Review

போர்த் ப்ளோர் திரைவிமர்சனம்

போர்த் ப்ளோர் திரைவிமர்சனம்

Review
போர்த் ப்ளோர்.. இந்த படத்தோட கதை என்னன்னா.. ஐடி ஊழியரான ஆரி, தன்னோட முன்னாள் காதலி திடீர்னு உதவிகேட்க மும்பையில இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாரு.. அவர் தங்கியிருக்கற அப்பார்ட்மெண்ட்ல ஏதோ அமானுஷ்ய விஷயங்கள் நடக்குது.. அதுமட்டுமில்லாம தன்னோட முன்னாள் காதலியும் காணாம போய் இருக்கறது தெரிய வருது.. அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன, காணாமல் போன காதலி‌ என்ன ஆனாங்க அப்படிங்கற கேள்விக்கு‌பதில் தான் போர்த் ப்ளோர்.. ஆரி, ஐடி ஊழியராவும் அன்பான காதலராவும் நடிச்சிருக்காரு.. சென்னைக்கு வந்ததுக்கு அப்புறமா அவரோட அப்பார்ட்மெண்ட்ல நடக்குற அமானுஷ்ய விஷயங்கள பார்த்து ஆரம்பத்துல பயப்படுறதாகட்டும் அதுக்கு அப்புறமா உண்மைய கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிக்கறதாகட்டும் நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு.. படம்‌ முழுக்க இறுக்கமான முகத்தோடவே வர்றாரு.. நடிப்புலயும் குறையில்ல.. நாயகி தீப்ஷிகா குறைந்த நேரமே வந்த...
தாய் கிழவி திரைவிமர்சனம்

தாய் கிழவி திரைவிமர்சனம்

Review
தாய் கிழவி.. இந்த படத்தோட கதை என்னன்னு பாத்தோம்னா.. ராதிகாக்கு மூனு பசங்க, ஒரு பொண்ணு.. ஊர்ல வட்டிக்கு விட்டு காசு சம்பாதிக்குறாங்க. அவங்கள கண்டா ஊரே பயந்து நடுங்கும்.. ஒரு பொம்பளையா இருந்து தானே கஷ்டப்பட்டு உழச்சு சொத்து சேர்த்து வெச்சிருக்காங்க.. சொத்த பிரிச்சு கேட்டதால பெத்த பசங்களலையே வீட்டுக்குள்ள சேக்காம இருக்காங்க. ஒருநாள் ராதிகா பக்கவாதத்துல படுக்க, இப்பவோ அப்பவோன்னு இழுத்துட்டு இருக்கு அவங்க உசுரு... இந்த நிலையில ராதிகா இவ்ளோநாள் சேர்த்துவெச்ச சொத்த எங்கயோ ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு பசங்களுக்கு தெரிய வர, எப்படியாச்சு ராதிகாவ காப்பாத்தி அந்த சொத்த அபகரிக்க நினைக்குறாங்க.. பசங்களோட கனவு நிறைவேறுச்சா, ராதிகா மறச்சி வெச்சிருக்கற சொத்து என்ன, ராதிகா உடல்நிலை சரியானாங்களா அப்படிங்கறத காமெடி கலந்து சொல்லியிருக்கற‌ படம்தான் தாய் கிழவி..   ராதிகா.. பவுனுத்தாயாக வாழ்ந்திருக்காங்...
தடயம் – விமர்சனம்

தடயம் – விமர்சனம்

Review
தடயம் – விமர்சனம் (4/5) ஒரு கிராமத்தில் இரண்டு தம்பதிகள் கொடூரமாக இரட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விசாரிக்கிறார் எஸ்.ஐ. அதியமான் (சமுத்திரக்கனி). அவரது திறமையை மேலதிகாரிகள் அலட்சியப்படுத்தினாலும், மூத்த அதிகாரி லக்ஷ்மி (ஷி வாத ) அவரை நம்பி, குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் இணைக்கிறார். அதியமானின் கூர்மையான விசாரணை திறமையால், ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் சந்தேக நபர்களை கண்டுபிடிக்கிறது அந்த குழு. விசாரணை ஆழமாக செல்லச் செல்ல, 1995ஆம் ஆண்டைச் சேர்ந்த சம்பவங்களுடன் இந்தக் கொலைக்கேஸ் தொடர்புபடுகிறது. கொலைக்காரர்கள் யார்? அதியமான் மற்றும் லக்ஷ்மி அவர்களை பிடிக்கிறார்களா? அவர்களின் பாதையில் என்னென்ன தடைகள், ஆபத்துகள் வருகிறது? உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படும் இந்த குற்றத் தொடர் மெதுவாக நகர்ந்தாலும், விறுவிறுப்பான “கேட்-அ...
Second Case of Seetharam Benoy – விமர்சனம்

Second Case of Seetharam Benoy – விமர்சனம்

Review
Second Case of Seetharam Benoy – விமர்சனம் கன்னட திரையுலகில் குற்றத் த்ரில்லர் வகையில் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் Vijay Raghavendra, Seetharam Benoy Case No 18 மற்றும் Case of Kondana ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, Second Case of Seetharam Benoy மூலம் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் திரைமுன் வந்துள்ளார். பிப்ரவரி 20ஆம் தேதி வெளியான இந்த தொடரின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு பூர்த்தி செய்கிறது என்பதே ரசிகர்களின் முக்கியக் கேள்வி.   கதை மற்றும் திரைக்கதை   சீதாராம் பெனாய், ஆனேகுட்டா காவல் நிலையத்தில் மதிப்புக்குரிய அதிகாரியாக திகழ்கிறார். அமைதி நிலவுகிறது என தோன்றும் தருணத்தில், ஒரே மாதிரியாக நிகழ்ந்த இரட்டை கொலைகள் நகரத்தை உலுக்குகின்றன. பிரேதப் பரிசோதனை அறிக்கை, இது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் செயல் எனக் க...
லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”  – திரை விமர்சனம்

லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”  – திரை விமர்சனம்

Review
லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”  - திரை விமர்சனம் அறிமுக இயக்குனர் மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா மற்றும் அறிமுக நாயகி சிம்ரன் அத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. படவா கோபி, வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.   ஒரே கல்லூரியில் படிக்கும் ராதா கிருஷ்ணா (ஆதவ் கிருஷ்ணா) மற்றும் சிம்ரன் அத்வானி இடையே ஏற்படும் தவறான புரிதலே கதையின் தொடக்கம். கல்லூரி வளாகத்தில் நாயகியை சிலர் தொந்தரவு செய்யும் சூழலில், அதை கண்டிக்கும் நாயகனின் செயலை தவறாக புரிந்துகொள்ளும் நாயகி, பின்னர் உண்மை அறிந்து அவருடன் நெருக்கம் பெறுகிறார். இந்த புரிதல் காதலாக மலர்கிறது. ஆனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனும், செல்வச் செழிப்பான மார்வாடி குடும்பத்தைச் சேர்...
கபுல் பிரண்ட்லி – திரை விமர்சனம்

கபுல் பிரண்ட்லி – திரை விமர்சனம்

Review
கபுல் பிரண்ட்லி – திரை விமர்சனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை வருடும் வகையில் கவித்துவ நயத்துடன், உணர்ச்சிகளை நுணுக்கமாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த காதல் திரைப்படமாக ‘கபுல் பிரண்ட்லி’ திகழ்கிறது. காதல், குடும்ப உறவுகள், வாழ்க்கை போராட்டம் ஆகியவற்றை இயல்பான அணுகுமுறையுடன் காட்சிப்படுத்தும் இந்த படம், பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகரமான அனுபவமாக அமைகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான UV Creations சார்பில் தயாரிப்பாளர் அஜய் குமார் பி தயாரித்துள்ள இந்த திரைப்படம் காதல், ரொமான்ஸ் மற்றும் குடும்ப உணர்வுகளின் சங்கமமாக உருவாகியுள்ளது. நடிப்பு & கதாபாத்திரங்கள்   இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சந்தோஷ் ஷோபன் தனது கதாபாத்திரமான சிவாவாக முழுமையாக வாழ்ந்து காட்டியுள்ளார். அமைதியான நடிப்பு, இயல்பான உடல்மொழி, உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்தும் திறன் ஆகியவை...
பூக்கி திரைவிமர்சனம்

பூக்கி திரைவிமர்சனம்

Review
சமூக வலைதளங்களில் உருவான புதிய சொல் பூக்கி. இன்றைய இளைஞர்களின் காதல் வெளிப்பாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த சொல், இளம் தலைமுறையின் உணர்வுகளையும் காதல் மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜய் திஷன், ஆர்.கே. தனுஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜே. ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷர்மி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. கதைக்களம் நாயகன் மற்றும் நாயகி இடையே உருவாகும் சிறிய கருத்து வேறுபாடு, அவர்களை பிரிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது. பிரிந்த பின்னரும், ஒர...
மைலாஞ்சி திரைவிமர்சனம்

மைலாஞ்சி திரைவிமர்சனம்

Review
“மைலாஞ்சி” – திரைப்பட விமர்சனம் அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “மைலாஞ்சி” திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா கருப், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பை இசைஞானி இளையராஜா மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை சேழியன் கவனித்துள்ள நிலையில், தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார். சென்னையிலிருந்து ஊட்டிக்கு ஒரு பறவையின் புகைப்படம் எடுக்கச் செல்லும் நாயகன் அங்கு நாயகியை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே மலரும் காதலும், அந்த காதலில் உருவாகும் சிக்கல்களையும் தாண்டி அவர்கள் இணைவதுதான் படத்தின் மையக்கதை. நாயகனாக நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக், தனது இரண்டாவது படத்திலேயே இயல்பான மற்றும் நம்பிக்கையூட்டும் நடிப்பை வழங்கியுள்ளார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக நடித்துள்ள கிரிஷா கருப், முன்பு பெற்ற அனுபவத்தை...
மை லார்ட் திரைவிமர்சனம்

மை லார்ட் திரைவிமர்சனம்

Review
‘மை லார்ட்’ – வலுவான கருத்து, தடுமாறிய திரைக்கதை வள்ளலார் கூறிய “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற மனிதநேயக் கொள்கையை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களத்தை எடுத்துக் கொண்டாலும், அதனை முழுமையான தாக்கத்துடன் வெளிப்படுத்தத் தவறிய திரைப்படமாக ‘மை லார்ட்’ அமைந்துள்ளது. படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதிகார அகங்காரத்தில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு, ஒரு சாதாரண மனிதனுக்கு தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மையமாகக் கொண்டதே இந்தப் படம். ஏழை கிராம மக்களை ஏமாற்றி நடைபெறும் சிறுநீரகத் திருட்டு சம்பவங்கள் படத்தின் முதல் பாதியில் வலுவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் இயக்குநர் ராஜு முருகன் கதை சொல்லும் பாதையை மாற்றி அமைத்தது திரைக்கதையின்...
திரௌபதி 2 – திரைவிமர்சனம்

திரௌபதி 2 – திரைவிமர்சனம்

Review
திரௌபதி 2 – வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை திறக்கும் அதிரடி அரசியல்-வரலாற்று காவியம். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம், 14-ஆம் நூற்றாண்டை பின்னணியாகக் கொண்டு, தென்னிந்தியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை அரசியல் – சமூகக் கோணத்தில் தீவிரமாக பேசும் படமாக உருவாகியுள்ளது. தென்னிந்தியாவில் சில இந்துக்கள், தங்கள் முன்னோர்களின் நிலங்கள் இன்று வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து, தங்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்பதை உணரும் சம்பவத்துடன் படம் தொடங்குகிறது. இதே நேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு இளம் பெண்களை, தங்கள் தந்தை ஒரு பழமையான கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒரு கிராமத்திற்கு அனுப்புகிறார். அவர்களுக்கு வழிகாட்டியாக வரும் இளைஞர் ரிச்சர்ட் ரிஷியுடன் பயணம் செய்யும் போது, அந்த பெண்களில் ஒருவரை பழைய கால அரசர்களி...