போலீஸ் ஃபேமிலி விமர்சனம்
போலீஸ் ஃபேமிலி விமர்சனம்
மிகப் பெரிய ரவுடியான சரவணன், தன்னோட பையனுக்காக ரவுடித்தனத்த விட்டுட்டு அமைதியா வாழ்ந்திட்டு இருக்காரு..இந்த நிலையில அவரோட பையன கஞ்சா கடத்துன வழக்குல போலீஸ் கைது பண்ணி ஸ்டேஷன்ல அடிச்சு துன்புறுத்தறாங்க.. உயிருக்கு போராடிட்டு இருக்கற பையன தூக்கிட்டு போய் காட்டுக்குள்ள போட்டுட்டு வந்திருறாங்க..ஆனா அடுத்த நாள் அந்த பையன் இறந்துகெடக்காரு.. சரவணனோட பையன்னு தெரிஞ்சதும் ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனே பயந்து நடுங்குது.. விஷயம் தெரிஞ்ச சரவணன் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையே பழிவாங்க துடிக்கிறாரு.. மகன கொன்னது யாரு.. சரவணனோட பழிவாங்குற திட்டத்துல இருந்து போலீஸ் டீம் தப்பிச்சாங்களா அப்படிங்கறதுதான் கதை..
தயாரிப்பாளர் ராஜா மலைச்சாமியே கதையோட நாயகனா நடிச்சிருக்காரு.. அதாவது எஸ்ஐயா ரெண்டு பெண்களோட அப்பாவா வர்றாரு.. ரவுடியோட பையன கைது பண்ணி லாக்கப்ல வெச்சு இவரு தலைமையிலான போலீஸ் டீ...









