Saturday, April 18
Shadow

Author: Tamil galaxy

தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு

Uncategorized
தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு நானும் விஜய் ரசிகர் தான் எங்களுடைய ரெட் லேபிள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அனு மோகன் விஜய் அரசியல் பற்றி பேசிய கருத்து பல ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது. அவர் பேசிய கருத்துக்கள் முழுவதும் அவர் தனிப்பட்ட கருத்துக்களே. அனு மோகன் அவர்கள் பேசியதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை, சொல்லப்போனால் நானும் விஜய் ரசிகர் தான் நான். ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி பற்றி நான் பேசிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையே நான் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க போவதில்லை. February 6th திரைக்கு வர இருக்கும் எங்கள் ரெட் லேபில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்🙏...
காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌன

காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌன

News
**“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்*   https://youtu.be/rph2F0uX-A0 Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது.   ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல...
திரௌபதி 2 – திரைவிமர்சனம்

திரௌபதி 2 – திரைவிமர்சனம்

Review
திரௌபதி 2 – வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை திறக்கும் அதிரடி அரசியல்-வரலாற்று காவியம். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம், 14-ஆம் நூற்றாண்டை பின்னணியாகக் கொண்டு, தென்னிந்தியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை அரசியல் – சமூகக் கோணத்தில் தீவிரமாக பேசும் படமாக உருவாகியுள்ளது. தென்னிந்தியாவில் சில இந்துக்கள், தங்கள் முன்னோர்களின் நிலங்கள் இன்று வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து, தங்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்பதை உணரும் சம்பவத்துடன் படம் தொடங்குகிறது. இதே நேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு இளம் பெண்களை, தங்கள் தந்தை ஒரு பழமையான கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒரு கிராமத்திற்கு அனுப்புகிறார். அவர்களுக்கு வழிகாட்டியாக வரும் இளைஞர் ரிச்சர்ட் ரிஷியுடன் பயணம் செய்யும் போது, அந்த பெண்களில் ஒருவரை பழைய கால அரசர்களி...
ஜாக்கி திரைவிமர்சனம்

ஜாக்கி திரைவிமர்சனம்

Review
ஜாக்கி – மண்ணின் மணமும், மானத்தின் மோதலும் கொண்ட ஒரு வலிமையான கிராமிய காவியம் மதுரையின் மண் தூசியில் பிறந்து, மரபின் வேர் பிடித்து, மனித அகங்காரத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அதிர்வூட்டும் கிராமிய காவியமாக ‘ஜாக்கி’ திரையரங்கில் முழங்குகிறது. ஆட்டுச் சண்டை எனும் உள்ளூர் கலாச்சாரத்தை வெறும் விளையாட்டாக அல்ல, அந்த மண்ணின் பெருமை, குடும்ப மரியாதை, தலைமுறை மரபு ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காட்டும் விதத்தில் இயக்குநர் பிரகபால் தனது கதை சொல்லலை மிக நுட்பமாக வடிவமைத்துள்ளார். ராமர் – கருப்புக் காளியுடன் அரங்கில் கால்பதிக்கும் சாதாரண மனிதன். ஆனால் அவன் காலடிச் சத்தம், அந்த அரங்கில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாக ஒலிக்கிறது. இதுவரை அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த கார்த்தியின் ஆதிக்கத்தை ஒரே மோதலில் சாய்த்துக் காட்டும் தருணம், வெறும் வெற்றியல்ல… அது ஒரு சமூக அமைப்பையே உலுக்கும் புரட்...
வா வாத்தியார் திரைவிமர்சனம்

வா வாத்தியார் திரைவிமர்சனம்

Review
வா வாத்தியார் – எதிர்பார்ப்பை ஏமாற்றிய நலன் குமாரசாமியின் வீழ்ச்சி ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என இரண்டு கல்ட் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து திரும்பியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஏகப்பட்ட தடங்கல்கள், ரிலீஸ் தள்ளிப்போன கதைகள், பெரிய நட்சத்திரப் பட்டாளம் – எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த படம் ஒரு ஸ்ட்ராங்க் கம்பேக் ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்தது. ஆனால் திரையில் வந்த பிறகு அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி விட்டது ‘வா வாத்தியார்’. எம்ஜிஆர் பக்தி, அரசியல் ஃபேண்டஸி, சமூக அநீதி, இரட்டை வேடம் என எல்லாவற்றையும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்த மாதிரியான குழப்பமான திரைக்கதை. ஒரு தெளிவான ஜானர் கூட இல்லை.   எம்ஜிஆரின் அவதாரமாக பேரனை வளர்க்கும் தாத்தா, சூழ்நிலையால் திருந்தும் ஹீரோ, அநீதிக்கு எதிராக போரா...
திரை விமர்சனம் : ‘அனந்தா’

திரை விமர்சனம் : ‘அனந்தா’

Review
திரை விமர்சனம் : ‘அனந்தா’ ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்களின் வாழ்க்கை அனுபவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அனந்தா’. புட்டபார்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் கதை தொடங்குகிறது. சாய்பாபா ஒருமுறை கடைசியாக ஆசிரமத்திற்கு வருமாறு கூறியதாக மருத்துவமனை நிர்வாகி தெரிவிக்க, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடுகிறார்கள். சுஹாசினி, ஜகபதி பாபு, வை.ஜி. மகேந்திரன், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது வாழ்க்கையில் சாய்பாபா ஏற்படுத்திய மாற்றங்களை அனுபவக் கதைகளாக பகிர்ந்து கொள்கிறார்கள். புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படம், மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அவற்றை சாய்பாபாவின் தெய்வீக அருள் எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் குறும்படத் தொடர் வடிவில் சொல்லுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் உணர்ச்சியையும் பக்தியையும் முன்னிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது...
பராசக்தி திரைவிமர்சனம்

பராசக்தி திரைவிமர்சனம்

Review
‘பராசக்தி’ – வரலாற்றின் குரலை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு சினிமா ஆவணம் தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தை வெல்லும். சில படங்கள் காலத்தோடு பேசும். அதிலும் அரிதாக சில படங்கள் காலத்தையே மீண்டும் உயிர்ப்பிக்கும். அந்த வரிசையில் நிற்கும் படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். சிவகார்த்திகேயனின் 25-வது படம், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100-வது இசையமைப்பு, சுதா கொங்கராவின் அழுத்தமான எழுத்து-இயக்கம் – இந்த மூன்று காரணங்களே இந்தப் படத்தை ஒரு சாதாரண பீரியட் படமாக இல்லாமல், ஒரு வரலாற்றுச் சினிமா நிகழ்வாக மாற்றுகின்றன. இந்த படம் ஒரு மொழியைப் பற்றிய படம் மட்டும் அல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம், உரிமை, தியாகம், கண்ணீர், போராட்டம் ஆகியவற்றின் கதை. “மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு அடையாளம், ஒரு உயிர்” என்பதை ஒவ்வொரு காட்...
தி ராஜா சாப் – திரவிமர்சனம்

தி ராஜா சாப் – திரவிமர்சனம்

News
தி ராஜா சாப் – பெயரிலேயே சாபம், திரையில் முழுக்க வேதனை தி ராஜா சாப் ஒரு படமா, இல்லையா 3 மணி நேரம் நம்மை சோதிக்க எடுத்த முயற்சியா என்பதே முதல் சந்தேகம். “தாத்தாவைத் தேடும் கதை”ன்னு சொல்லிட்டு, தியேட்டரில் உட்கார்ந்த நமக்குத்தான் கடைசி வரை **என்னடா தேடுறாங்க? ஏன் தேடுறாங்க? எங்க போகுது இந்தப் படம்?**ன்னு புரியாம போகுது. பிரபாஸ் மாதிரி ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து, இப்படி ஒரு திசைத் தெரியாத, உயிரே இல்லாத படத்தை எடுக்க எவ்வளவு அலட்சியம் வேணும்? கதையே சரியா எழுதல. திரைக்கதைன்னு ஏதோ ஒன்று இருக்கிற மாதிரி நடிக்குது. சீன் ஆரம்பிக்கும், திடீர்னு கட். ஏன் வந்துச்சு, எதுக்குன்னு கேள்வி கேட்டா பதிலே கிடையாது. பாட்டி – தாத்தா – பேரன் சென்டிமென்ட்னு ஆரம்பிச்ச கதை, நடுவுல போய் பேய், ஹிப்னோசிஸ், தாந்திரீகம், காஸ்ட்யூம் பார்டி, காமெடி, ஹாரர், ஃபேண்டஸின்னு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா தூக்கி போட...
தி ராஜா சாப் திரைவிமர்சன்

தி ராஜா சாப் திரைவிமர்சன்

Review
தி ராஜா சாப் – பெயரிலேயே சாபம், திரையில் முழுக்க வேதனை தி ராஜா சாப் ஒரு படமா, இல்லையா 3 மணி நேரம் நம்மை சோதிக்க எடுத்த முயற்சியா என்பதே முதல் சந்தேகம். “தாத்தாவைத் தேடும் கதை”ன்னு சொல்லிட்டு, தியேட்டரில் உட்கார்ந்த நமக்குத்தான் கடைசி வரை **என்னடா தேடுறாங்க? ஏன் தேடுறாங்க? எங்க போகுது இந்தப் படம்?**ன்னு புரியாம போகுது. பிரபாஸ் மாதிரி ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து, இப்படி ஒரு திசைத் தெரியாத, உயிரே இல்லாத படத்தை எடுக்க எவ்வளவு அலட்சியம் வேணும்? கதையே சரியா எழுதல. திரைக்கதைன்னு ஏதோ ஒன்று இருக்கிற மாதிரி நடிக்குது. சீன் ஆரம்பிக்கும், திடீர்னு கட். ஏன் வந்துச்சு, எதுக்குன்னு கேள்வி கேட்டா பதிலே கிடையாது. பாட்டி – தாத்தா – பேரன் சென்டிமென்ட்னு ஆரம்பிச்ச கதை, நடுவுல போய் பேய், ஹிப்னோசிஸ், தாந்திரீகம், காஸ்ட்யூம் பார்டி, காமெடி, ஹாரர், ஃபேண்டஸின்னு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா தூக்கி போட...
மார்க் திரைவிமர்சனம்

மார்க் திரைவிமர்சனம்

Review
மார்க் – வேகம் தான் மொழி, ஆவேசம் தான் சட்டம் சினிமாவை அமைதியாக உட்கார்ந்து ரசிக்க நினைப்பவர்களுக்கு அல்ல மார்க். இது முதல் காட்சியிலிருந்தே பார்வையாளரை பிடித்து இழுத்து, “இங்கே சிந்திக்க நேரமில்லை, ஓடணும்” என்று கட்டளை போடும் படம். உடல்கள், ரத்தம், குழப்பம் – எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் படம் தொடங்குகிறது. இங்குதான் இயக்குநர் விஜய் கார்த்திகேயா ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறார்: இந்த உலகத்தில் சட்டம் காகிதத்தில் தான் இருக்கிறது; நடைமுறையில் இயங்குவது வன்முறையும் உள்ளுணர்வும். படத்தின் ஆரம்பத்திலே நடக்கும் கொலை ரவுடித்தனங்களை நடத்தும் கொடூர சம்பவங்களின் மையமாக நிற்பவன் பட்ரா (நவீன் சந்திரா). அவன் ஒரு வில்லன் அல்ல; வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு மனிதன். தம்பி ருத்ராவின் (விக்ராந்த்) எதிர்ப்பும், குடும்ப அவமானமும் அவனின் வன்முறைக்கு தீப்பொறியாக மாறுகிறது. இங்கு வில்லத்தனம் திட...