அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் “ஃபுட்டேஜ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது !*
*TAMIL & ENGLISH PRESS RELEASE*
*அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியாகியுள்ளது !*
தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் "ஃபுட்டேஜ்" படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, "ஃபுட்டேஜ்" டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது.
மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம...







