மார்க் திரைவிமர்சனம்
மார்க் – வேகம் தான் மொழி, ஆவேசம் தான் சட்டம்
சினிமாவை அமைதியாக உட்கார்ந்து ரசிக்க நினைப்பவர்களுக்கு அல்ல மார்க்.
இது முதல் காட்சியிலிருந்தே பார்வையாளரை பிடித்து இழுத்து, “இங்கே சிந்திக்க நேரமில்லை, ஓடணும்” என்று கட்டளை போடும் படம்.
உடல்கள், ரத்தம், குழப்பம் – எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் படம் தொடங்குகிறது. இங்குதான் இயக்குநர் விஜய் கார்த்திகேயா ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறார்:
இந்த உலகத்தில் சட்டம் காகிதத்தில் தான் இருக்கிறது; நடைமுறையில் இயங்குவது வன்முறையும் உள்ளுணர்வும்.
படத்தின் ஆரம்பத்திலே நடக்கும் கொலை ரவுடித்தனங்களை நடத்தும் கொடூர சம்பவங்களின் மையமாக நிற்பவன் பட்ரா (நவீன் சந்திரா). அவன் ஒரு வில்லன் அல்ல; வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு மனிதன். தம்பி ருத்ராவின் (விக்ராந்த்) எதிர்ப்பும், குடும்ப அவமானமும் அவனின் வன்முறைக்கு தீப்பொறியாக மாறுகிறது. இங்கு வில்லத்தனம் திட...









