திரை விமர்சனம்: ‘அங்கம்மாள்’
திரை விமர்சனம்: ‘அங்கம்மாள்’ – ஒரு பெண்ணின் சுதந்திரப் போராட்டம்
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்க்க பால் வியாபாரம், விவசாயம் என எதையும் அஞ்சாது உழைக்கும் வலுவான பெண்ணாக ‘அங்கம்மாள்’ படத்தில் வெளிப்படுகிறார். தைரியம் மட்டுமல்லாது, பழமைவாத எண்ணங்களை தன் நடைமுறையில் பின்பற்றும், ஜாக்கெட் அணியாத மனப்பான்மையையும் உறுதியாக கைக்கொள்கிறார்.
மூத்த மகன் பரணி திருமணத்திற்குப் பிறகும் அம்மாவுடன் வாழ, இளைய மகன் சரண் மருத்துவராக உயர்கிறார். சரண் காதலிக்கும் பணக்கார வீட்டு பெண் குடும்பத்தினர், அவரது அம்மா ஜாக்கெட் அணியாதிருப்பதை தவறாக நினைப்பார்கள் என்ற பயத்தில், அம்மாவை ‘மாற்ற’ முயற்சிக்கிறார். அண்ணியின் உதவியுடன் ஜாக்கெட் அணிய வைக்கப்பட்டாலும், இதன் பின்னணி அக்கறை அல்ல, வெளிப்படையான மதிப்பீடுகளைப் பொருட்படுத்திய மாற்ற முயற்சிகள் என்பதை உணரும் கீத...









